பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்துக் குடும்பம் 79.

வந்து ஒன்றுவதைப் புணர்வது என்று இலக்கணப் புலவர்கள் சொல்கிருர்கள். பெண்ணும் ஆணும் ஒன்றுபடுவதையும் அதே வார்த்தையால் உலகத் தில் வழங்குகிருேம்.

ம்ே என்ற கற்புடைய பெண், 'சா என்ற கணவனேக் கண்டவுடன் என்ன செய்கிருள் பார்ப்போம்; அந்தப் புருஷனுக்கு ஏற்ற பெண் யார் என்று பார்க்கிருள்; அந்தப் பெண் அருகிலேதான் நிற்கிருள் புணர்ச்சி யில், ம்’ என்ற பெண் அங்கே இருப்பதில்லை; 'சா என்ற கணவனுக்கு உரிய ஜோடியாகிய, ‘ஞ்’ என்ற பெண் வந்துவிடுகிருள். எனவே. மரம்-சாய்ந்தது என்ற இரண்டையும் சேர்க்கும்போது, ம்ே போய், ஞ் ஆகி மரஞ் சாய்ந்தது என்று முடிகிறது. கல்யாணம் கற்பு முறைப்படி நடந்துவிடுகிறது. -

- 3

உலகத்தில் உள்ள கல்யாணம் எப்படியோ, அப்படியே எழுத்துலகிலும் கல்யாணம் நடைபெறு கிறது. அந்தக் கல்யாணத்தின் ஒழுங்கு முறைகளைத் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் புணரியல் முதலிய அத்தியாயங்கள் மூலமாகத் தெரிவிக்கிறது.