பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4

ஒசையின் அளவு

உலகத்தில் உருவம் படைத்த பொருள் எதுவா குலும் அதற்குத் தோற்றமும் கேடும் இருக் கின்றன. கடவுளே ஒர் உருவத்தை எடுத்துக் கொண்டால், அதை நீங்கி நிற்கும் காலமும் அவருக்கு ஏற்படும். எழுத்துக்கள் ஒலியாகிய உருவத்தை உடையன. வேறு பிரித்து அறியும்படி மென்மை வன்மை முதலிய தொனி வேறுபாடுகளும், குறில் நெடில் என்ற அளவு வேறுபாடுகளும் எழுத்துக்க ளுக்கு இருக்கின்றன. ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் உருவத்தைப் பெற்றிருப்பதனால் அதற்குத் தோற்ற

மும் கேடும் உண்டு. அப்படியானல் அழியாதது என்று பொருளுடைய அகூடிரம் என்ற சொல்லால் எழுத்குக்களே வடமொழியாளர் குறிக்கின்றர்களே

என்ருல் எழுத்து என்றும் இருக்கின்றது; ஆனல் ஒரு மனிதன் ஒரு சமயத்தில் வெளிப்படுத்தும் எழுத் தென்னும் ஒலியானது அதற்குரிய கால அளவையில் ஒலித்துக் காற்றில் கலந்துவிடுகிறது. நம்முடைய காதிலே கேட்கும் கால அளவையை அதன் ஆயுளச கக் கருதினுல் அதற்குத் தோற்றமும் மறைவும் உண் டென்றுதான் சொல்லவேண்டும். ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட காலத்தில் சொல்லும் அகரம் அழிந்துவிடுகிறது. ஆனல் அதோடு அகரம் என்பதே உலகத்தை விட்டு அழிந்துவிடவில்லை. அதன் பண்பு