பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 பயப்படாதீர்கள்

'உன்னல் காலே உறுத்தல் அரைய்ே முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே

என்பது பழைய இலக்கணச் சூத்திரம்:

இயற்கையாக உள்ள எழுத்துக்கள் , அரை, ஒன்று, இரண்டு என்ற மாத்திரைக் கணக்குக&ளக் கொண்ட மூன்று வகுப்பாக இருக்கின்றன. மெய் என்ற பிரிவையுடைய எழுத்துக்களுடைய கால அளவு அரை மாத்திரை. குற்றெழுத்துக்கு ஒரு மாத்திரை. நெட்டெழுத்துக்கு இரண்டு மாத்திரை. இயற்கையாக இல்லாமல் சில காரணங்களால் ஓசை குறையும் எழுத்துக்களும் இருக்கின்றன. முன்னே சொன்ன குற்றியலுகரம், குற்றியலிகரம், மகரக் குறுக்கம் முதலியவை இத்தகையனவே. இயற்கையான உகரத்துக்கும் இகரத்துக்கும் ஒரு மாத்திரையே கால அளவு. குற்றியலுகரம், குற்றிய லிகரம் என்னும் இரண்டுக்கும் அந்தக் கால அளவு குறைகிறது. அரை மாத்திரைதான் அவற்றிற்க்கு, மாத்திரை குறைவதனால்தான் அவை தன்ரியாகப் பிரிக்கப்பட்டு, 'மாத்திரை குறுகிய இயல்புடைய, எழுத்துக்களாயின.

இயற்கை நிலயினின்றும் மாறினமையால் அவற்றின் பிரயோகங்களிலும் மாறுபாடுகள் உண் டர்கின்றன. ുഞ് மாத்திரையையுடைய மெய்

களைப் பல விஷயங்களில் இந்த இரண்டெழுத்துக்

களும் ஒத்து நிற்கின்றன. மெய்களைப் போல இவை

இரண்டும் புள்ளி வைத்து எழுதும் இயல்பைப் பெற் றன. மெய்யும் உயிரும் சேரும்போது என்ன நிகழ் கின்றதோ அதுபோன்ற நிகழ்ச்சியே பெரும்பாலும், குற்றியலுகரமும் உயிரும்சேரும்போது நிகழ்கின்றது.