பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசையின் அளவு 83

ஆய்தம் என்ற எழுத்துக்கு அரை மாத்திரை. அது பின்னும் குறைந்து ஒலிக்கும் இடம் உண்டு. அப்போது அதற்கு, ஆய்தக் குறுக்கம்’ என்ற பெயரும் கால் மாத்திரையாகிய கால அளவும் ஏற்படுகின்றன. மகரக் குறுக்கம் என்ற குறுகிய எழுத்துக்கும் கால் மாத்திரைதான். - - r

ஐகார ஒளகாரங்கள் சிறிது குறைந்த ஒசை யோடு ஒலிப்பது உண்டு. அப்போது முறையே, "ஐகாரக் குறுக்கம், ஒளகாரக் குறுக்கம்’ என்று அவற். றைச் சொல்வார்கள். இவற்றிற்குச் சில சமயம் ஒன்றரை மாத்திரையும் அமையும். -

'இயற்கையான ஒசையினின்றும் எழுத்துக்கள் குறைந்து ஒலிப்பது போலவே நீண்டும் ஒலிப்பது உண்டு. குறைந்து ஒலிப்பது சில எழுத்துக்களுக்குத் தான் உண்டு. நீண்டு ஒலிப்பது உயிர்மெய் என்னும் இரண்டு வகை எழுத்துக்களுக்கும் உண்டு. வாழ்க். கையில் எழுத்துக்கள் நீண்டு ஒலிப்பதைத்தான் கேட் கலாம். யாரையாவது கூப்பிடுகையில் ராமா.ஆஆ? என்று நீட்டிக் கூப்பிடுகிருேம். பாடுகிறவர் தம் விருப் பம் போலவெல்லாம் நீட்டுகிறர். வீதியிலே புளி விற் கிறவன் புளிஇஇ என்று நீட்டுகிருன் வார்த்தை களில் வரும் எழுத்துக்களுக்கெல்லாம் இலக்கணம் வகுந்த ஆசிரியர்கள் இந்த நீண்ட ஓசையையுடைய வற்றிற்கும் இலக்கணம் வகுக்காமற் போகவில்லே. . . . .

உயிரெழுத்து, தன்னுடைய அளவாகிய மாத்தி ரையில் நீண்டு ஒலித்தலின் அதற்கு, உயிர் அளபெடை என்று பெயர். அப்படி நீட்டி ஒலிக்கும்போது ஒசையின் நீளம் காதில் படுகிறது. . அதை எப்படி எழுத்திலே குறிப்பது ஓசை குறைந்த எழுத்துக்