பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பயப்படாதீர்கள்

களே எழுத்தில் குறிக்கும்போது புள்ளியிடுவதை முன்பு பார்த்தோம். ஒசை மிக்க எழுத்துக்களைக் குறிக்கவும் ஒரு வழி செய்திருக்கிருர்கள். எந்த உயிரெழுத்து ஒசை அதிகமாகிறதோ, அளபெடுக் கிறதோ, அதன் இனமாகிய குற்றெழுத்தை அதன் பின்னே அடையாளமாக இட்டார்கள். எவ்வளவு தூரம் எழுத்து நீளலாம் என்பதற்குத் தொல்காப்பி யர் வரையறை சொல்லாவிட்டாலும் 12 மாத்திரை வரையில் நீளலாம் என்று வேறு ஆசிரியர்கள் குறித் திருக்கிருர்கள். ஒரு மாத்திரை , அதிகமால்ை "ஒரு குற்றெழுத்தும், இரண்டு மாத்திரை அதிகமா குல்ை இரண்டு. குற்றெழுத்தும் போடவேண்டும். இலக்கியங்களில் இரண்டு மாத்திரை அதிகமாக நீண்டு வருவதைக் காணலாம். அதற்குமேல் சங்கீதம் முதலியவற்றிலே பார்க்கலாம்.

- ரோமாஅ அ என்று எழுதினால், மா என்ற எழுத்து, தனக்கு இயல்பான இரண்டு மாத்திரை யோடு பின்னும் இரண்டு மாத்திரை அதிகமாக உச்சரிப்பதற்குரியது என்று தெரிந்துகொள்ள லாம்.

உயிரெழுத்துக்களைப் போலவே மெய்யெழுத்துக்களும் ஓசை மிக்கு ஒலிப்பதுண்டு. அது செய்யுளில்தான் வரும். அதற்கு, ஒற்றளபெடை என்று பெயர். தொல்காப்பியர் அதைச் செய்யுளிலக்கணம் சொல்லு மிடத்தில்தான் சொல்கிருர் ஒற்றளபெடையை எழுத்திலே குறிக்க மற்றெரு மெய்யெழுத்தைப் போடுவது வழக்கம். ... " . . . . . . . . .

தொல்காப்பியர் சங்கீதத்தில் எழுத்துக்கள் தமக்