பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

இலக்கண மரங்கள்

தமிழர் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தவர்கள். தென்றலின் இனிமையையும் செங்கதிரவனது ஒளியையும் சந்திரனது அமுத கிரணத்தையும் நன்ருக நுகர்ந்தவர்கள். கடல் அலைகளின் பேரொலியையும் மலேயருவியின் ஒல்லொலியையும் கேட்டு இன்புற்றவர் கள். மரம், செடி, கொடிகளையும், பசு, எருமை, யான், புலி, சிங்கம் முதலிய விலங்கினங்களையும், கிளி, குயில், மயில் முதலிய பறவைகளையும் நன்பர்க ளாகக் கொண்டு வாழ்ந்தவர்கள், வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களே மரங்களிலிருந்து பெற்றுக் கொண்டார்கள். அவர்களுடைய ஊர் மரமடர்ந் தது; அதன் பெயர் மரத்திலிருந்து பிறந்தது; அவர்க ஞடைய வீடு மரங்கள் உதவிய பொருள்களால் அமைந்தது; உடை தழைகளாளும் மலர்களாலும்

காய், கனி, கிழங்கு, தானியம் ஆகிய தாவர விளைபொருள்களே உணவாகக் கொண்டார்கள். காதிலே " தளிரை ச் செருகித்கொண்டார்கள்; - தலையிலே கண்ணி, சூடினர்; மார்பிலே மீால புனைந் தனர். சாதியைக் குறிக்கத் தனித்தனி மாலே. போரில் ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு மா8ல. கடவுளுக்குத் தனித் தனி அடையாள மாலே. இப் படியாக வாழ்வு முழுவதும் மரங்களோடும் மலர்க ளோடும் இணைந்து வாழ்ந்த தமிழர்கள் இயற்கை வளம் செறிந்த காடுகளில் வசித்தார்கள். தமிழ்நாடு.