பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண மரங்கள் 87

முழுவதையுமே தண்டகாரணியம் என்று புராணம் கூறுகிறது. அடர்த்தியான மரச்செறிவினிடையே வாழ்ந்த தமிழர்கள் மகிழ்ச்சியையும் துக்கத்தை யும், போரையும் காதலேயும் குறிப்பிக்க அவற்றையே

துணையாகக் கொண்டார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் மரம் செடி கொடிகள் எவ்வளவு

தொடர்பு உடையனவாக இருந்தன என்பதைத் தெரிந்துகொள்ளத் தொல்காப்பியமும் ஓரளவு துணசெய்கிறது. y “w

- இலக்கண நூலிலிருந்து எப்படி வாழ்க்கையை உணரலாம் என்ற சத்தேகம் அன்பர்களுக்கு உண்டா கும். இலக்கணம் மொழியின் இயல்பைச் சொல் கிறது. மொழி என்பது என்ன? மனிதனது உள்ளக் கருத்தைப் புலப்படுத்துவதற்குரிய கருவி அது. அவனுடைய கருத்துக்கும் வாழ்வுக்கும் சம்பந்தம் , இல்லையா? வாழ்வில் நிகழும் நிகழ்ச்சிகளையும், வாழ்வில் டயன்படும் பொருள்களேயும், sostols சம்பந்தமான எண்ணங்களையும் பற்றிய செய்திகளே. வெளியிட மொழி உதவி செய்கிறது. ஒரு மொழி யில் எந்த வகையான பெருள்களுக்கு அதிகமான பெயர்கள் உண்டோ, அந்த வகையான பொருள்கள். அந்த மொழியைப் பேசுகிறவர்களின் வாழ்க்கையில் நெருங்கிய சம்பந்தமுடையன என்று தெரிந்து கொள்ளலாம்.

இந்த உண்மையை வைத்துக்கொண்டு பார்ப் போமால்ை தமிழ்மொழியில் எவ்வளவோ மரம் செடி கொடிகளுக்கும் பேர்கள் அமைந்திருப்பதை உணர்ந்து தமிழர் அவற்றை வாழ்க்கையிலே நன்கு