பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பயப்படாதீர்கள்

பயன்படுத்திக் கொண்டார்களென்று ஊகித்துத்

- தெரிந்துகொள்ளலாம்.

பேச்சுவழக்கில் வார்த்தைகள் எப்படி எப்படி மாறுகின்றன என்பதை இலக்கணம். சொல்

கிறது. 'மா' என்பது ஒரு மரத்தைக் குறிக்கும் பெயர். அதைத் தனியே சொல்லாமல், *Ingrib” Gréir பதையும் சேர்த்து மாமரம் என்று சொன்னல் விளக்கமாக இருக்கிறது. மாமரத்தில் வசந்த காலத்தில் பூவைக் காண்கிருேம். குழந்தைகட்ட, 'மாம்பூ” என்று சொல்லுகிறது. 'மா' என்பத ைேடு, 'பூ' என்பதைச் சேர்த்துச் சொல்லும்போது நடுவிலே ஒரு ம் வருகிறதே, இதை இலக்த்ண் நூலார் கவனித்திருக்கிருர்கள். குழந்தை இலக்கணம் தெரிந்தா பேசுகிறது? இல்லவே இல்லை. இயற்கை யாகவே அந்த மாதிரியாகத் தமிழ் அமைந்திருக்கிறது. அதைப் பார்த்துப் பார்த்து இலக்கண ஆசிரியர்கள், மா என்ற பெயரும், பூ என்ற பெயரும் ஒன்றுபட் டால் நடுவில், ம்ே வரும் என்று தீர்மானித்தார்கள். அதுதான் இலக்கணம். வாழ்க்கைக்குப் புறம்பே எங்கோ வறண்ட பாலைவனப் பிரதேசத்திலிருந்து நம்மைப் பயமுறுத்துவதற்காக வந்திருக்கிற பூச் சாண்டி அல்ல, இலக்கணம். மாங்காயில் வரும் 'ங்' என்ற எழுத்தும், மாம்பழத்தில் வரும், ம் என்ற எழுத்தும். சொல்லும் சொல்லும் சேர்ந்து புணரும்

போது, கல்யாண்ம் செய்து கொள்ளும்போது, இடையே .ே த ன் றும் அலங்காரங்களைப்

போன்றவை.

இந்த முறையில் புணர்ச்சியில் உண்டாகும் மாறுபாடுகன்த் தொல்காப்பியத்தில் உள்ள எழுத்ததி