பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

5

வடநாட்டுத் திருத்தலப்பயணம்

நித்திய சூரிகளும், பூனுால் இலங்கும் மார்பினையுடைய அந்தணர் குழாங்களும் இவன் திருக்கோயிலைச் சூழ்ந்து நின்று இவனைச் சேவிக்கின்றனர். ஒழிவில் காலமெல் லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்யவேண்டும் நாம்' என்று இடைவிடாது அடிமை செய்யப் பாரித் திருக்கின்ற அடியார் திருக்கூட்டமும் பரமபதத்தில் பரத் துவத்தை அநுபவிப்பதைக் காட்டிலும் எம்பெருமானின் இங்குள்ள செளலப்பியம், செளசீல்யம் போன்ற திருக் குணங்களை அநுபவிப்பதில் பேரவாக் கிளர்ந்து இங்கு வந்து திரண்டிருக்கும் நித்திய சூரிகளின் திரள்களும், சாதிச் செருக்கே இயல்பாகவுடைய பார்ப்பனைக் கூட்ட மும் ஒரு சேர நிற்பது அகில நிலை ஒருமைப்பாட்டைக் (Univerself integration) or to filjäär spää Gr,7?

4. வடமதுரை: சாளக்கிராமத்தைச் சேவித்த ஆழ் வார் வட மதுரைக்கு" வருகின்றார். இது கண்ணன் பிறந்த திருப்பதியல்லவா? ஆழ்வார் பாடியதாகப் பதிகம் ஒன்றும் இல்லை. அடியார்கட்குப் பரதந்தரப்பட்டிருக்கும் தன்மை யில்-எளிமைக் குணத்தில்-உள்ளத்தைப் பறிகொடுத்த =35έρδυπ Τ ,

9. திருவாய். 3.3:1

10. வடமதுரை: தில்லிக்கு முன்னதாகவே 170 கி. மீ. தொலைவில் உள்ள ஓர் இருப்பூர்தி நிலை யம், நிலையத்திலிருந்து ந்கரம் சும்ார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. மேற்கிருந்து கிழக்கு நோக்கி ஓடும் யமுனை நதிக்கரையில் உள்ளது. முத்தி தரும் ஏழு நகரங்களுள் இதுவும் ஒன்று. கண்ணுக்கு மதுரமாயிருத்தலாலும், மது என்ற அசுரனை அழித்த இடமாத்லாலும் இதற்கு மதுரை என்று பெயர் வந்ததாகக் கூறுவர். திருத்தலப் பயணிகள் வசதியாக நீராடுவதற்கு நல்ல படித்துறையொன்று அமைக்கப் பெற் றுள்ளது. ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த