பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 翰星

7. பரமபதம்": இது திருதாடு நலம் அந்தம் இல்லா தோர் நாடு (திருவாய் (2.8:4) 'நித்திய விபூதி’, ‘பெரு நிலம்’, ‘பெரு விசும்பு', நீள் விசும்பு’, உம்பர் உலகு", 'விண்ணகம்', 'நாரணன் உலகு இன்பவீடு' 'அமரர் 'இன்ப வீடு', 'அமரர் உலகம்’, ‘வானோர் கடிநகர்' என் றெல்லாம் ஆழ்வார்கள் பன்னி உரைப்பர். திருமங்கை யாழ்வார் திருக்குறுந்தாண்டகப் பாசுரம் ஒன்றில் (11) பரமபத நாதனை.

அண்டம் ஆய் எண்திசைக்கும் ஆதியாய், நீதி ஆன

பண்டம்.ஆம் பரமசோதி!

நின்னயே பரவுவேனே

என்று மங்களாசாசனம் செய்து மகிழ்கின்றார்.

8. அயோத்தி: இத்திருத்தலத்தைப்பற்றி ஆழ் வார் பதிகம் ஒன்றும் இல்லை. அரக்கர்கள் குழமணி துர்ரம்' என்ற கூத்தை இராமபிரான் முன்னர் ஆடுவதாக

20. சிந்தை செல்லா சேண்நெடுந் தூரத்தது. பெரி திரு. 7.3:5. மேலும் விவரம் வேண்டு வோர் இந்த ஆசிரியரின் வடகாட்டுத்திருப்பதி கள் என்ற நூலில் 14-வது கட்டுரை காண் க்.

21. அயோத்தி இந்தத் திவ்விய தேசம் வாரணா சிக்கும் இலக்னோவிற்கும் (இலட்சுமணபுரி) இடையே கிழக்கு இருப்பூர்திப் பாதையில் உள்ளது. இதுவும் ஒர் இருப்பூர்தி நிலையம். இது பைசபாத் நிலையத்திலிருந்து ஏறக்குறைய 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சரயூ நதிக்கரை யில் அமைந்த ஒரு சிறு நகரம். அயோத்தி-பகை வர்களால் ப்ோர் செய்து வெல்ல முடியாதது என்பது பொருள்.