பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 73

است.

சிங்கவேழ் குன்றத்தில் எம்பெருமான் ஒன்பது இடங்களில் ஒன்பது நரசிம்மர்களாக எழுந்தருளியுள்ளார். மலை செல்லும் வழியில் கீழ் அகோபிவத்தினின்று இரண்டு கி.மீ. தொலைவில் இருவர் உள்ளனர். ஒருவர் சத்ரவட நரசிம்மர் (1). இவர் ஓர் அரசமரத்தடியில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அரவணை மேல் வீற்றிருந்த கோலமாய் அதிகாம்பீகரியத்துடன் சேவை சாதிக்கின்றார். மற்றொருவர் யோகநரசிம்மர் (2). இவர் ஒரு சிறிய திருக்கோயிலில் கால்மீது கால்போட்டுக் கொண்டு முன்னிரண்டு கைகளும் முழங்கால்களின்மீது தங்கிய வண்ணம் யோகம் செய்யும் பாவனையில் எழுந்தருளியுள்ளார்.

மேல் அகோபிலத்திலுள்ள திருக்கோயில் கருடாத்திரி வேதாத்திரி (அத்திரி - மலை) என்ற இரண்டு குன்று களுக்கிடையே பாவநாசினி என்ற நதியருகில் அமைந் துள்ளது. தெற்குப் புறத்தில் மூன்று குகைகள் உள்ளன. நடுவிலுள்ள குகையில் கற்பாறையில் குடைந்தெடுக்கப் பெற்ற திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவர் உக்கிர' நரசிம்மர் (3). இருந்த திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டவர். இவரே இத்தலத்தின் நாயகர். தாயார் இலக்குமி நாச்சியார். இவர் இரணியன் மார்பை தம் நகங்களால் கிழிக்கும் நிலையில் காட்டப் பெற்றுள் ளார். இவரைத்தான் ஆழ்வார் அவுணன், பொங்க ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்” (1). `கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த கூருகிராளன்’ (2). அவுனன் வாய்ந்த ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மான்' (3), பொன் பெயரோன் இன்னுயிரை வவ்வி ஆகம் வள்ளுகிரால் வகிர்ந்த அம்மான் (4) அவுணன் பொன்ற ஆகம் வள்ளுகிரால் போழ்ந்த புனிதன்' (5) எரிந்த பைங்கண் இலங்கு பேழ்வாய் எயிற்றோடு இது எவ்வுரு என்று, இரிந்து வானோர் கலங்கியோட இருந்த