பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘74 பரகாலன் பைந்தமிழ்

அம்மான் (6) மூவுலகும் பிறவும் அனைத்தும் அஞ்ச ஆளரியாய் இருந்த அம்மான் (7) என்று மங்களா சாசனம் செய்துள்ளார்.

இத்திருக்கோயிலின் கீழ்த் திசையில் சுமார் முக்கால் கி. மீ. தொலைவில் கோயில் கொண்டிருப்பவர் வராக கரசிம்மர் (4). இவர் பூமிப் பிராட்டியைத் தம் மடியில் தாங்கிக் கொண்டு சேவை சாதிக்கின்றார். இங்கிருந்து சுமார் 3 கி.மீ. தொவிைல் செங்குத்தான கண்டாத்திரி' எனப்படும் குன்றில் கோயில் கொண்டிருப்பவர் பிரகலாத நரசிம்மர் (5). இவர் குகையொன்றில் இலக்குமி தன் மடியிலிருந்த வண்ணம் சாந்த மூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார். இங்கிருந்த உற்சவமூர்ததி ஆதிவண்சட கோபரால் (மடத்தை நிறுவியவர்) அகோபில மடத்தில் வைக்கப்பெற்றுள்ளதாக அறிகின்றோம். பிரகலாத நரசிம்மன் அருகில் பிரகலாத பாறை' என வழங்கும் கல்மேடை ஒன்றுள்ளது, இதிலமர்ந்துதான் பிரகலாதன் எம்பெருமானிடம் பாடங்களைப் பயின்றான் என்பது புராண வரலாறு. இங்கிருந்து 3 கி. மீ தொலைவில் 'உக்குஸ்தம்பம்’ என வழங்கும் தூண் உள்ளது. இதுவே இரணியன் புடைத்த தூண்; எம்பெருமான் நரசிம்ம உருவமாய் வெளிப்பட்ட துரண்.

இங்கிருந்து சுமார் இரண்டரைக் கி. மீ. தொலைவில் சேவை சாதிப்பவர் ஜூவால நரசிம்மர் (6). இப்பெரு மானுக்குக் கார்த்திகைத் திங்களில் நெய்யில் அல்லது எண்ணெயில் திருவிளக்கு ஏற்றும் வழக்கம் இருந்து வருகின்றது. இங்கிருந்து (அல்லது கீழ் அகோபிலத்தி லிருந்து) சுமாக ஏழரை கி. மீ. தொலைவில் ஸ்வேதாத் திரிகுன்றில் எழுந்தருளியிருப்பவர் பாவன நரசிம்மர் (7). இவரைப் பார் முலிடி நரசிம்மர் என்றும் வழங்கு வதுண்டு. மலை அடிவாரத்தில் எழுந்தருளியிருப்பவர்