பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. தொண்டை நாட்டுத் திருத்தலப் பயணம்

வடநாட்டுத் திருத்தலப் பயணத்தை முடித்துக் கொண்ட பரகாலன் சான்றோர்கள் நிறைந்த தொண்டை நாட்டைத் திருவுளங் கொண்டு முதலில் திருவள்ளுரில்: தம் திருவடியை வைக்கின்றார். பெரும்பாலும் ஆழ்வார் பாடிய பாசுரங்கள் யாவும் நாலாயிரத் திவ்வியப் பிரபந் தப் பதிப்புகளில் அவர் பயணம் செய்த தல வரிசைகளிலே அமைந்திருப்பதாகக் கருதலாம். சைவ இலக்கியததிற்கு 'பெரிய புராணம்' என்ற ஒர் அருமையான வரலாற்றுக் காவியம் அமைந்திருப்பதுபோல் வைணவ இலக்கியத் திற்கு அமையாதது ஒரு பெருங்குறை. இத்திருத்தலத்து எம்பெருமானை திருமங்கையாழ்வார் ஒரு திருமொழி யால் (2.2) மங்களாசாசனம் செய்துள்ளார். வழக்கப் போல் இவர் பாசுரங்களில் காணப்பெறும் திருத்தலத்தின் நீர்வளம், நிலவளம், இயற்கை அழகு முதலியவை இத்திரு மொழியில் காணப் பெறவில்லை. எம்பெருமானைப் பற்றிய செய்திகள் மட்டுமே நிறைந்தது இத்திருமொழி.

1. திருவள்ளுர்- இது சென்னைக்கு வடமேற்குத்

திசையில் சென்னை-அரக்கோண்ம் இருப்பூர்தி

வழியிலுள்ள திருவள்ளுர் நிலையத்திலிருந்து

சுமார் இரண்டு கல் தொலைவிலுள்ளது. குதிரை