பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 103

வழங்கும் பேச்சு ஒன்று உண்டு. ஆனால் இங்கு பதினான்கு திவ்விய தேசங்களே உள்ளன. சுமார் ஐந்து கல்லுக்கு மேல் நீண்டிருக்கும் இந்நகரத்தை இரண்டு கூறுகளாக்கிச் சிவகாஞ்சி (பெரியகாஞ்சி), விஷ்ணுகாஞ்சி (சின்னகாஞ்சி): என்று பெயரிட்டுள்ளனர். பெரிய காஞ்சியில் உள்ள பெரிய கோயில் ஏகாம்பர நாதர் திருக்கோவில்; சின்ன காஞ்சியில் உள்ள பெரிய கோவில் வரதராசர் திருக்கோயில். ஆயினும் பெரிய காஞ்சியில்தான் அதிக மான சிவாலயங்கள் உள்ளன. சுமார் முப்பதிற்கு மேற்பட்ட சிவாலயங்களும், இருபதிற்கு மேற்பட்ட திருமால் ஆலயங்களும் இந்த இரு பகுதிகளிலும் இருப்பனவாகத் தெரிகின்றது.

பெரிய காஞ்சியில் 1. உலகளந்த பெருமாள் சந்நிதி (ஊரகம்), 2. திருக்காரம், 3. திருநீரகம், 4. திருக்கார் வானம், 5. வைகுண்டப் பெருமாள் சந்நிதி (பரமேச்சுர விண்ணகரம்), 6. திருப்பவள வண்ணம், 7. திருப் பாடகம், 8. நிலாத்திங்கள் துண்டம், 9. திருக் கள்வனூர் ஆகிய ஒன்பது திவ்விய தேசங்களும்; சின்ன காஞ்சிபுரத்தில் 1. அத்திகிரி, 2. திருவெஃகா (சொன்ன வண்ணம் செய்த பெருமாள் சந்நிதி) 3. அட்டபுயகரம், 4. திருத்தண்கா (விளக்கொளிப் பெருமாள் சந்நிதி), 5. வேளுக்கை என்ற ஐந்து திவ்விய தேசங்களும் உள்ளன. திருமங்கையாழ்வார் சின்ன காஞ்சிபுரம் தொடங்கிதான் தம் மங்களாசாசனத்தையும் தொடங் கினார் என்று கருதி நாமும் அவ்வாறே இக்கட்டுரையில் பதிவு செய்வோம்.

3. ஜைன காஞ்சி'தான் 'சின்னக்காஞ்சி ஆயிற்று என்பர் ஆய்வாளர்கள். சேலம் மாவட்டத்தில் "சின்னசேலம்' என்ற ஒர் ஊர் உண்டு. அது ஜைனசேலம்’ ஆக இருந்திருக்க வேண்டும் என்று நினைக்க இடம் உள்ள்து.