பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 105

திருப்பரமேச்சுர விண்ணகரத்தை மங்களா சாசனம் செய்யும் பாசுரம் ஒன்றில்,

உரந்தரு மெல்லனைப் பள்ளிகொண்டான்

ஒருகால்முன்னம் மாவுரு வாய்க்கடலுள் வரந்தரு மாமணி வண்ணன் இடம்"

(உரம் தரு-வலிமிக்க; மாஉரு-விலட் சணமான

வடிவம்)

என்ற அடிகளில் வரும் வரந்தரும் மாமணி வண்ணன்' என்ற தொடர் வரதராசனைக் குறிப்பதாகக் கொள்வர்.

இப்படிக் கொண்டால் இப்பாசுரம் ஒன்றே ஆழ்வாரால்

அத்திகிரி அருளாளனை மங்களா சாசனம் செய்யப்பட்ட

பாசுரமாகும். இக்காரணத்தால் காஞ்சிப் பகுதி வைண

வர்கள் இப்பாசுரத்தை இரட்டித்து ஒதும் வழக்கத்தை

மேற்கொண்டுள்ளனர்.

9. திருவெஃகா7. இத்தலத்தைப்பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு. திருமங்கையாழ்வார் திருக்குறுந் தாண்டகத்தில்,

பெரி. திரு. 2. 9: 3

இஃது இன்று சொன்னவண்ணம் செய்த பெருமாள் கோயில் என்று வழங்கப்படுகின்றது. இது காஞ்சியில் ஆடிசன் பேட்டைக்கு_அருகில் வரதராசிப்பெருமாள் சந்நிதியை நோக்கிச் செல்லும் கீழ்மேல் சாலைக்கு வடபுறமாகச் சற்று உள்ளே தள்ளி உள்ளது. பெரும் பாண்ாற்றுப் படையிலும் (அடி 290-91) இத் திருக்கோயில் பற்றிய குறிப்பு காணப் பெறுகின் றது. எம்பெரும்ான்; சொன்னவண்ணம் செய்த பெருமாள்:கிட்ந்த திருக்கோலம்(புயங்க சயனம்); மேற்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார் :