பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 123

பெருமான் எழுந்தருளியிருக்கும் தலமாதலால் 'நீரகம்’ என்ற திருநாமம் பெற்றதாகப் பெரியோர் பணிப்பர். இந்த எம்பெருமானை ஆழ்வார் நீரகத்தாய்!” (திரு நெடுந். 8) என்ற ஒரே சொல்லால் மங்களாசாசனம் செய்துள்ளார். எம்பெருமான் சந்நிதியில் ஒரு கரண்டி தீர்த்தம் பெற்றது போன்ற மகிழ்ச்சி நமக்கு ஏற்படு கின்றது. எம்பெருமான்: ஜகதீசப்பெருமாள்; நின்ற திருக் கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலம் கொண்டு நில மங்கை வல்லித் தாயாருடன் காட்சி தருகின்றார்.

15. திருக்காரகம் : இஃது இத்திருக்கோயில் தாயார் சந்நிதிக்கு எதிரில் உள்ளது, மேகத்தின் தன்மை கள் போன்றவற்றைக் கொண்ட திருக்குணங்கள் நிறைந்த எம்பெருமான் கோயில் கொண்ட இடமாதலின் இது 'காரகம்’ என்ற திருநாமம் (கார்-மேகம்) பெற்றதாகப் பெரியோர் கூறுவர். இந்தத் தலத்து எம்பெருமானை ஆழ்வார்.

உலகம் ஏத்தும் காரகத்தாய்!

(திருநெடுந் 8)

என்ற மூன்று சொற்கள் கொண்ட ஒரே தொடரால் மங்களாசாசனம் செய்துகொண்டு மகிழ்கின்றார் ஆழ்வார். நமக்கும் தீர்த்தம், திருத்துழாய், சடகோபம் பெற்ற மகிழ்ச்சி ஏற்படுகின்றது. இந்த எம்பெருமான்கருணாகரப் பெருமாள் : நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு பத்மாமணி நாச்சியாருடன் சேவை சாதிக்கின்றார்.

16. திருக்கார்வானம் : இந்தச் சந்நிதி உலகளந்த பெருமாள் திருக்கோயிலின் நுழைவாயிலைக் கடந்த வுடன் வலப்புறமாக வெளிச்சுற்றில் அமைந்துள்ளது. மேகத்தின் தன்மைகள் யாவும் இத்தலத்து எம்பெருமா