பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓋盛部 பரகாலன் பைந்தமிழ்

tதும்பு-துளை, கை-துதிக்கை வன்தாள்-வலிய கால், களிறு-யானை அரவம்-பாம்பு, வெருவ. அஞ்சும் படியாக, பூம்புனல்-அழகிய நீர்; பொய்கை-குளம்)

என்பது இந்நிகழ்ச்சிகளைக் குறிப்பிடும் பாசுரப்பகுதி. மீனமர் பொய்கை நாள்மலர் கொய்யுங்கால் முதலையி னால் அடர்ப்புண்ட கானமர் வேழத்தின் இடரைத் தீர்த்தருளின் எம்பெருமான் இந்திரியங்களாகிய பல முதலைகளின் வாயில் அகப்பட்டுத் தவிக்கும் நம்மையும் காத்தருள்வான் என்பது ஆழ்வார் விட்டுவைத்த குறிப்பு.

அடுத்த நான்கு பாசுரங்களிலும் எம்பெருமானின் நரசிம்மாவதாரம், வாமன - திரிவிக்கிரமாவதாரம், இராமாவதாரம், கிருட்டிணாவதாரம் ஆகிய நான்கு அவதாரங்களின் வீரச் செயல்கள் அதுசந்திக்கப் பெறு கின்றன.

இங்ஙனம் ஆழ்வார் கூறும் நான்கு அவதாரங்களும் நம்மை அவதார இரகசியத்தை நினைக்கச் செய்கின்றன. எம்பெருமானுடைய அவதாரங்கள் யாவும் மெய் யானவை; இந்திரசாலம் போல் மயக்குபவை அல்ல. எம்பெருமான் தனக்கேயுரிய இயல்புகளனைத்தையும் அவதார காலத்திலும் கொண்டுள்ளான். அவதார காலத்திலும் அவனுடைய திருமேனி இராசச - தாமச குணங்களின் சம்பந்தமே இல்லாது சுத்த சத்துவமாக உள்ளது. எம்பெருமான் இக்கரும பூமியில் அவதரிப்பு தற்கு அவனது சங்கல்பமேயன்றிக் கர்மம் காரணமன்று. பூமியில் அறம் குன்றி மறம் தலையெடுக்கும் பொழுது எம்பெருமான் அவ்வக் காலத் தேவைக்கேற்றவாறு அவதாரங்களை மேற்கொள்ளுகின்றான். சாதுக்களை இரட்சிப்பதே அவதாரத்தின் முக்கிய பலனாக அமை கின்றது.