பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 129

அடுத்து ஆழ்வார் அண்மையிலுள்ள * l! Sj ଇ? வண்ணம் என்னும் திருப்பதிக்கு எழுந்தருள்கின்றார்.

18. திருப்பவன வண்ணம் : இந்தத் திவ்விய தேசத்திற்கு எழுந்தருளிய திருமங்கையாழ்வார் திருநெடுந் தாண்டகத்தில் பவளவண்ணா (9) என்று இவரை மங்களாசாசனம் செய்கின்றார். இதைத்தவிர ஆழ்வார் பாசுரங்களில் இந்த எம்பெருமானைப்பற்றி வேறு குறிப்புகள் இல்லை. 'பவள வண்ணா என்பதற்கு பவளம் போல் விரும்பத்தக்கதான வடிவு படைத்தவனே!" என்பதே பொருளாகத் தோன்றுகின்றது. பெரிய வாச்சான் பிள்ளை வியாக்கியானத்திலும் இப்படித்தான் கானப்படுகின்றது. எனினும் பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரிய சுவாமிகள் திருப்பவள வண்ணம் என்னும் திருப்பதியில் உறைபவனே! என்றே பொருள் கொண்டுள்ளார்கள். பெரியவாச்சான் பிள்ளைக்கு முற்பட்டவரும் பராசரபட்டர் திருவடிகளில் பணிந் துய்ந்தவருமான திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரின் திருவுள்ளத்தைத் தழுவியே இங்ங்ணம் கூறுவர் பிரதிவாதி பயங்கரம்.பவள வண்ணம் திருப்பதிக் கருகில் உள்ள பச்சைவண்ணர் திருப்பதிக்கு ஆழ்வார் ஏனோ எழுந்தருளவில்லை. அவர் காலத்தில் அத் திருக் கோயில் இல்லை போலும்.

இத்திருத்தலத்திலிருந்து ஆழ்வார் நேராகத் திருப் பாடகம்' என்ற திவ்விய தேசத்திற்கு வருகின்றார்.

23. பவளவண்ணம்- பெரிய காஞ்சிபுரத்தில் வைகுண்டப் பெருமாள் அருகிலுள்ளது இத் திவ்விய தேசம். எம்பெருமான் பவளவன்னன். தாயார்: பவளவல்லி நாச்சியார். திருநெடுந். 9

.LI.3% ."-9