பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. நடுநாட்டுத் திருத்தலப் பயணம்

"கடு நாடு என்றால் நடுவில் உள்ள நாடு எனப் பொருள்படும். சோழநாடு, பாண்டிநாடு, சேரநாடு தொண்டைநாடு இவற்றிற்கு நாற்புறத்தெல்லை கூறிய கம்பநாடன் நடு நாட்டிற்கு எல்லை கூறவில்லை. வே, இவர்காலத்து நடுநாடு என்னும் பிரிவு இருந்த ல எனக் கருத வேண்டியுள்ளது. கடுநாயகம்"

"கடு காடு என்பதற்கும் பொருள் இருக்கலாம் என்று கருதவும் இடம் உண்டு. நடுநாடு என்பது திருவயிந்திர புரமும் திருக்கோவலூரும் அடங்கிய நாடு. முதல் ஆழ்வார்கள் மூவரும் மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநாடு' என்ற சிறப்பெய்தியது இந்நாடு. இச் சிறப்பைக் கருதி திருக்கோவலூருள்ள இந்நாட்டை 'கடு காடு', நடுநாயகமாகவுள்ள நாடு எனவும் கொள்ள லாம். நடுநாட்டிற்குத் தெற்கே சோழநாடு, பாண்டு நாடு மலைநாடு என்ற மூன்றும்; வடக்கே தொண்டை நாடு, வடநாடு, திருநாடு என மூன்றும்; இந்த மூன்று மூன்று நாடுகட்கு நடுவே, உள்ள நாட்டை நடு நாடு’ எனக் கொண்டனர் போலும் இது பரமபதவாசி பூதூர் மகா வித்துவான் கி. வேங்கடசாமி ரெட்டியார் அவர்களின் கருத் தாகும் எது எப்படியிருப்பினும் 'திவ்வியப் பிரபந்தம்’

1. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (அவர் பதிப்பு)

பின் இணைப்பு 3. பக் 177. காண்க.