பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 167

திருச்சித்திர கூடம் சேர்மின்களே என்கின்றார். காழிச் சீராம விண்ணகரத்தைப் பற்றிப் பேசும்போது காழிச் சீராம விண்ணகரம் சேர்மின் நீரே என்கின்றார்"; திருநறையூரைப் பற்றிப் பேசும்போது திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே' என்கின்றார். இப்படிப் பல திருப்பதிகளையும் எடுத்துரைத்து சென்று சேர்மின்கள்சென்று சேர்மின்கள்’ என்றால் எந்தத் திருப்பதியில் சென்று சேர்வது?' என்று வைணவ அடியார் ஒருவரை மற்றோர் அடியார் கேட்க, அதற்கு அவர், "ஆழ்வார் திருவாயில் நுழைந்து புறப்பட்ட திருப்பதிகள் எல்லாம் நுழைந்து புறப்பட வேண்டியது பிராப்தம்' என்று அவர் மறுமொழி பகர்த்தது வைணவ சமூகம் நன்கு அறியும். *தான் உகந்த ஊரெல்லாம் தன் தாள் பாடிய' (திருநெடுந், 6) ஆழ்வாரே பதியே பரவித் தொழும் தொண்டர் (7.1:7) என்று குறிப்பிடுவதால் எம்பெரு மான் உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் சென்று சென்று சேவிக்க வேண்டும் என்பது உட்கருத்து.

காழிச் சீராம விண்ணகரத்து எம்பெருமானை ஆழ்வார் ஒரு திருமொழியால் (3.4) மங்களா சாசனம் செய்கின்றார்.

ஒருகுறளாய் இருநிலம்மூ வடிமண் வேண்டி

உலகனைத்தும் ஈரடியால் ஒடுக்கி ஒன்றும் 'தருக எனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் தாள் அணை வீர் தக்க கீர்த்தி. அருமறையின் திரள் நான்கும் வேள்வி ஐந்தும்

அங்கங்கள் அவை.ஆறும் இசைகள் ஏழும் தெருவில்மலி விழாவளமும் சிறக்கும் காழிச்

சீராம விண்ணகரே சேர்மின் நீரே (!).

(இருநிலம்-விசாலமான நிலம்; ஒடுக்கிஆக்கிரமித்து; ஒன்றும்-மூன்றாவது அடி நிலத்