பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏馨惑 பரகாலன் பைந்தமிழ்

தையும்; தாடாளன்-பெருமை பொருந்தியவன்; தாள்-திருவடி, திரள்-கூட்டம் தொகுதி)

என்பது முதற் பாசுரம், கம்பீரமாத நடைபெறுகிறது. இத்தப் பாசுரத்தில் திரிவிக்கிரமாவதாரம் பற்றிய செய்தி வுடன் வடமொழி இலக்கியம்பற்றிய குறிப்புகளையும் தகுகின்றார் ஆழ்வார். இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என மறைகள் கான்கு. பிரம்மயஜ்ளும், தேவயஜ்ஞம், ஆதயஜ்ளும், பித்ருயஜ்ளும், மநுஷ்யஜ்ஞம்: என வேள்விகள் ஜக்து. சிட்சை, வியாகரணம், சந்தஸ், திருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என வேதாங்கங்கள் ஆறு. திஷாதம், ரிஷபம், காந்தாரம், ஷட்ஜம், மத்யமம், தைவதம், பஞ்சமம் என இசைகள் ஏழு. இந்தப் பதிகத் தில் பாசுரங்களின் பிற்பகுதி திவ்வியதேசத்தைப் பற்றிய வருணனையையும், முற்பக்தி இங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானையும் எடுத்துரைக்கின்றன.

திவ்விலதேசவளம் : இத்தலத்தைச் சூழ்ந்துள்ள வயல்களில் சூல்கொண்டுள்ள சங்குகள் கருவுயிர்க்கும் திலையிலுள்ளன; அங்கு உழுகின்ற எருதுகள் அங்கும் இங்கும் ஓடுகின்றன; இந்த அதிர்ச்சியினால் சங்குகள் முத்துகளை ஈனுகின்றன. வெள்ளை வெளே ரென்று இருக் கின்ற இந்த முத்துகளைக் கொக்குகள் கண்டு தம்முடைய முட்டைகள் என்று மயங்குகின்றன; அவற்றைச் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண்டுள்ளன. கழனிகளில் எங்கும் தாமரை மலர்கள் நிறைந்துள்ளன; மீன்கள் குறுக்கும் தெடுக்குமாகத் துள்ளிக் குதிக்கின்றன (2) கழனிகளில் பயிர்களினிடையே உள்ள நெய்தல், குவளை, குமுதம், தாமரை இவற்றைக் களைபறிக்கும் கடைச்சிமார்கள் தெய்தல், குவளை மலர்களைத் தங்கள் கண்களாகவும், சிவந்த ஆம்பல் மலர்களைத் தங்கள் வாயாகவும் தாமரை மலர்களைத் தங்கள் முகமாகவும் மயங்கிக் களை