பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 175

மையால் ஆழ்வார் தலைவனோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டியின் நிலையை ஏறிட்டுக்கொண்டு பரகால நாயகியாகி அந்நிலையில் பேசுகின்றார்". அடுத்திரு மொழி (3,7) தாய்ப்பாசுரமாக நடைபெறுகின்றது. இதுவும் பிறிதோர் இடத்தில் விளக்கப் பெறுகின்றது." அடுத்து திருநாங்கூர்த் திருப்பதிகள் பதினொன்றையும் மங்களா சாசனம் செய்யத் திருவுள்ளம் கொண்டு புறப் படுகின்றார்".

அடுத்த இந்தளுள் என்ற திவ்விய தேசத்தை நோக்கி வருகின்றார்.

4. இத்தளுர்": இந்தத் திவ்விய தேசத்து எம்பெரு மானை ஆழ்வார் இந்தளூர் அந்தணன் (பெ. திருமடல் 63) என்று குறிப்பிடுகின்றார். சந்திரனது சாபம் நீங்கப்

6. இதனை மகள் பாசுரம் என்று வழங்குவர். துரது விடுவதாக அமைந்த இப்பதிகம் பிறிதோர். இடத்தில் (கட்டுரை-18) விளக்கப் பெறுகின்றது.

7. இதனை (கட்டுரை-17) தெளியலாம்.

8. இதனைத் தனிக் கட்டுரையில் (கட்டுரை-9)

கண்டு மகிழலால்.

9. இந்தளூர் மயிலாடுதுறை இருப்பூர்தி நிலையத் திலிருந்து வடகிழக்குத் திசையில் மூன்று கல் தொலைவிலுள்ளது; அதாவது மயிலாடுதுறை யின் வடக்கு முனையிலுள்ளது. இருப்பூர்தி நிலையத்திலிருந்து குதிரை வண்டி, மர்ட்டு வண்டியில் போகலாம். மயிலாடுதுறை நகரிலி ருந்து நடந்தே செல்லலாம். எம்பெருமான்: சுகந்தவனநாதன், பரிமளரங்கன், அந்நியரங்கன், மருவினியமைந்தன் என்ற திருந்ாமங்களும் உள்ளன. மூலவருக்கு நான்கு புயங்கள் உள்ளன. சயனத்திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண் . லம். தாயார்: புண்டரீகவல்லி, சந்திர