பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxi

ஜித பாஹ்ய ஜிராதி மணி ப்ரதிமா அபி வைதிகயந் நிவ ரங்க புரே மணிமண்டப வப்ரகனார் விததே பரகால கவி : ப்ரணமே மஹிதாத்.

என்று தமது ரங்கராஜஸ்தவத்திலும், பெரிய திருமடல் 137 வது கண்ணி வ்யாக்யானத்தில் என்ன பட்டணத்தே புக்கான்? இடைச்சேரியன்றோ?-என்ன மகுட பங்கம் பண்ணினான்? துன்னு படலன்றோ?-என்ன ப்ரதிமை எடுத்தான்? வெண்ணையன்றோ? என்ன திருப்பணி செய்தான்? தன் வயிறு வளர்த்தான் அத்தனையன்றோ? திருமங்கையாழ்வாரைப்போலே பரார்த்தமாக களவு காண் திறதன்று. என்று வ்யாக்யான சக்ரவர்த்தியான பூரீ பெரிய வாச்சான் பிள்ளை வ்யாக்யான பங்க்திகளும், அதே கண்ணிக்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் வ்யாக்யானத்தில் களவு காண்பது துச்சமான தயிரும் வெண்ணையுமன்றோ! பெளத்த ப்ரதிமையோ? ஏதேனுமொரு திருமதிள் செய்கைக்காக வன்றோ’என்ற பங்க்தியும் பக்கம் 40ல் கண்டுள்ள பேராசிரியரின் ஐயத்தைத் தெளிவிக்கும்.

நான்காவது இயல் முதல் 8 இயல்கள் வரை திருத்தல்ப் பயணம் பற்றியவை. இப் பயணத்தில் திருமங்கையாழ் வார் மேற்கொண்டதாகப் பெரிய திருமொழி அமைப்பில் உள்ள திருத்தலப் பயண முறையைத் தவிர்த்து, ஆசிரியர் தாமாகவே ஒரு வழிப்பயண முறையில் அமைந்துள்ளார். திருநாங்கூர்த் திருப்பதிகளை அநுபவிக்கும்போதும், பெரியவர்கள் நிர்வ ஹித்துள்ள பெரிய திருமொழி அமைப்பில் உள்ள வரிசையில்லாது புது வழியால் பயணத்தை விவரித்துள்ளார்.

வடநாட்டுத் திருத்தலப் பயணத்தில் திருப்பிருதி, வதரித்திருமலை, சாளக்ராமம், வடமதுரை, திருவாய்ப்