பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈鄧爵 பரகாலன் பைந்தமிழ்

வைணவ தத்துவமாகிய சரீர-சரீரி பாவனையும் திரு வழுத்தார் பற்றிய இவ்வாழ்வாரின் பாசுரங்களில் இடம் பெறுகின்றது.

பகலும் இரவும் தாணேயாய்

பாரும் விண்ணும் தானேயா (ய்)

திகரில் சுடரில் இருளாகி

நின்றார். (7.5:5)

இதில் பாரும் விண்ணும் தானே ஆய்' என்பதனால் அசித்து எம்பெருமானின் உடலாய்த் திகழ்கின்றது என்று அவனது திவ்விய மங்களத் திருமேளி காட்டப் பெறு கின்றது.