பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿藝藝 பரகாலன் பைந்தமிழ்.

முலைக்கண்களையும் வாளால் திசி ந்தவன்; பூமிப் பிராட்டியும் பெரிய பிராட்டியும் தன்னைவிட்டுப் பிரியாதவர்களாகப் பொருந்தியிருக்கப் பெற்றவன் {5}. மீன், வாமனன், அன்னம், வராகம், நரசிம்மம், ஐயக்கிரீபன் என்ற அவதாரங்களை எடுத்தவன். அண்ட மும் சூரியனும் சந்திரனும் மற்றுமுள்ள பொருள்களும் தானாகவே இருக்கப் பெற்றவன் (6).”

குன்றமும் வானும் மண்ணும் குளிர்புனல் திங்களோடு தின்றவெஞ் சுடரும் எல்லா

நிலைகளும் ஆய எந்தை(7) திருமணிக்கூடத்தில் எழுந்தருளியுள்ளான். இவன்தான்,

சங்கையும் துணிவும் பொய்யும்

மெய்யும்.இத் தரணி ஒம்பும் பொங்கிய முகிலும் அல்லாப்

பொருள்களும் ஆய எந்தை (8)

tசங்கை-ஐயம்: தரணி.பூமண்டலம்; ஒம்பும் பாதுகாக்கும்; முகில்-மேகம்)

ஆவான். மேலும்,

பாவமும் அறமும் வீடும்

இன்பமும் துன்பந் தானும் கோவமும் அருளும் அல்லாக்

குணங்களும் ஆய எந்தை (9)

இவனேயாவான். இந்த எம்பெருமானை மும்மூர்த்தி களும், முனிவர்களும், தேவர்களும் வந்து வணங்குவர்.

6. இது வைணவ தத்துவமாகிய சரீர சரீரி பாவனை

பாகும்.