பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 215

  • 、感罗

ஒரு பெரிய இடம். 'நாங்கூர் நாலாயிரம்' என்று வழங்கி வரும் சொற்றொடர்ப்படி நாலாயிரம் வைணவக் குடிகள் வாழ்ந்த இடமாதலால் அவரவர்கட்கு அணித்தாக இருக்குமாறு எம்பெருமான் பதினொரு இடங்களில் சந்நிதி பண்ணல்ாயிற்று. திருமங்கையாழ்வார் மட்டிலும் இத்திருத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். இத் திருத்தலத்தை.

--நாங்கூரில் மன்னும் மணிமாடக்

கோயில் மணாளனை (72)

என்று தம் பெரிய திருமடலில் குறிப்பிடுவர். இதைத் தவிர ஒரு திருமொழியில் (3.8) இத்தலத்து எம்பெரு மானை மங்களாசாசனம் செய்துள்ளார்:

திருத்தலச் சூழ்நிலை ; இந்த ஆழ்வார் பாசுரங் களில் இத்திருத்தலச் சூழ்நிலை அற்புதமாகச் சித்திரிக்கப். படுகின்றது. வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர் (10) என்று சிறப்பிப்பர். மேலும்,

எத்திசையும் கந்தாரம் அமிதேன் இசைபாட, மாடே களிவண்டு மிழற்ற நிழல்துதைந்து மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர் (1)

(கந்தாரம்-தேவகந்தாரி இராகம்: களிவண்டு - ஒரு வகைச் சாதி வண்டு; மி.ழற்ற-ஒலிக்க, மந்தா ரம். பாரிஜாத மரங்கள்; துதைந்து-நெருங்கி; மல்கும்-நிறைந்திருக்கும்;

என்ற பாசுரப் பகுதியில் ஒரளவு நன்கு இச்சூழ்நிலை

காட்டப் பெறுகின்றது. எல்லா இடங்களிலும் அழகிய தேன்சாதி வண்டுகள் தேவகாந்தாரி இராகப் பாடுகின்