பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 2 #7

இருந்த இடத்திலேயே இடம் - வலம் கொண்டு அசை போடுகின்றன; பிறகு மெதுவாக நடந்து சென்று செங்கழுநீர்ப் பூக்கள் நிரம்பியிருக்கப்பெற்ற அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே மூழ்குகின்றன; குட்டையின் சேற்றிலே கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த்தெடுத்துத் தாங்கிக்கொண்டு கிளம்பி, பின்னர்க் கரையேறவும் முடியாதபடி அவ்விடத்திலேயே தாம தித்துக் கிடக்கின்றன (). அன்னப் பறவைகள் தாமரைப் பூக்களில் தம்பதிகளாக இருந்து கொண்டு விளையாடுங் கால் அம்மலர்கள் துகைக்கப்பெற்று அவற்றினின்றும் மது வெள்ளம் பெருகிச் செங்கழுநீர் மடைகளிலும் ஒடிப் பாய் கின்றது (9).

நகரச் சிறப்பு : திருநாங்கூர் நகரச்சிறப்பு பற்றியும் பாசுரங்களால் அறிய முடிகின்றது. இந்நகரத்தில் மாட மாளிகைகள் விண்ணளவும் ஓங்கியுள்ளன; அவற்றில் புறாக்கள் கொடுங்கையின் மேலுள்ள மெல்லிய பேடை களுடன் உல்லாசமாகக் கலவி செய்து மகிழ்கின்றன (2). இவ்வூரிலுள்ள வைதிக அந்தணர்கள் காருகபத்தி யம், ஆகவநீயம், தாட்சிணாக்கினி என்ற மூத்தி வளர்த்து, இருக்கு. யஜுர், சாமம், அதர்வணம் என்ற வேதங்களை ஒதி பிரம்மவேள்வி, தேவ வேள்வி, பூத வேள்வி, பித்ரு வேள்வி, மனுஷ்ய வேள்வி என்ற ஐம்பெரு வேள்விகளை அதுட்டிப்பவர்களை சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், சோதிடம் கல்பம் என்ற வேதாங்கங்கள் ஆறையும் பயின்றவர்கள்; நிஷதம், ரிஷபம், காந்தாரம், ஷட்ஜம், மத்யமம், தைவதம், பஞ்ச மம் என்ற ஏழு ஸ்வரங்களையும் அறிந்தவர்கள் (4). இங்குள்ள வைதிக அந்தணர்கள் அல்லும் பகலும் மறை யோதிக்கொண்டே இருப்பர்; அவர்கள் வீட்டு மகளிரும் விடாமல் காதில் பட்ட உறைப்பின் மிகுதியால் மறை வாக்கியங்களை விடாமல் சொல்லுகின்றனர்; அவர்கள் கையில்ே இருந்து வளர்ந்து சொன்னதைச் சொல்லுமாம்