பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蠶翼壽 பரகாலன் பைந்தமிழ்

கிளிப்பிள்ளைகளும் மறைபாடுகின்றன. ஆக, இப்படி லைதிகர்கள் வாயிலும், அவர்கள் வீட்டு மகளிரின் வாயிலும், அம்மகளிர் வளர்க்கும் கிளிப்பிள்ளைகள் வாயிலும் தே ஒலி மலியப் பெற்றது. இத்திருத்தல மாகும் (8).

திருதாங்கூரின் மாடமாளிகைகளில் கொடிகள் நாட்டப் பெற்றுள்ளன. (5) இக்கொடிகள் சந்திர மண் டலத்தை எட்டியிருக்கும்; சந்திரன் சஞ்சரிக்கும்போது, இக்கொடிகளில் துவக்குண்டு அப்பால் செல்ல முடியாத படி அவற்றோடு விளையாடுகின்றான். இப்படிப்பட்ட மாளிகைகள் நிறைந்த வீதிகளில் குறத்திகள் தங்கட்கு விளையாட்டாகக் கிடைக்கின்ற நன்முத்துகளைக் கூடை கூடையாக கொண்டு நாழி நெல்லுக்கு விற்பனை செய் கின்றார்கள். திருதாங்கூரரிடத்தும் முத்துகள் ஏராள மாக இருக்கையாலே, அவர்கள் வந்து அவற்றைக் கொள்வதில்லை: குதத்திகள் தாங்களே சென்று, வேண்டாமென்று கதவடைத்துக் தள்ளினாலும், நாழி தெல்லுக்கு தானாழி முத்துக் கொள்ளுங்கள்' என்று வதுக்கட்டாயமாகக் கொடுக்குமாறு கூறுகின்றமை தோன்றும், இந்தச் சந்தைநிலை விவரத்தால் ஊரின் செல்வச் செழிப்பைச் சொன்னவாறு (7):

தலத்து எம்பெருமான் : இத் தலத்து எம்பெரு மானின் பெருமையும் பாசுரங்களில் பேசப் பெறுகின்றது. தேவர்கள் இத்தலத்தில் குழுமி எம்பெருமானை நந்தா விளக்கே! அளத்தற்கரியாய்! நரநாராயணனே கருமா முகில் போன்ற எந்தாய்!” என்று பரவுகின்றனர். ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை நந்தா விளக்கே" என்று குறிப்பிட்டமையால் எம்பெருமானின் திருநாம மும் கந்தா விளக்கு என்று வழங்கலாயிற்று. "சுயம் பிரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனே!"