பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாங்கூர்த் திருத்தலப் பயணம் 2 19

என்பது இதன் பொ. ரு ள ா கு ம் (1). இத்திருக் கோயிலில் சந்நிதி பண்ணியிருப்பவன் 'ஆதிமூலமே!’ என்று கூவியழைத்த முதலையின் வாயில் அகப்பட்டுக் கொண்டு திண்டாடின கசேந்திரன் என்ற யானையின் துயர் துடைத்தவன் (2), யானையின் துயர்தீர்த்த எம் பெருமானுக்கு அண்டினவர்களின் விரோதிகளைக் களைந் தொழிந்தால் அம்மகிழ்ச்சிக்குப் போக்கு வீடாகப் பெரிய பிராட்டி வெகுமானம் பண்ணுகின்றாள்; தனது திரு முலைத் தடத்தாலே அவனை அமுக்கிக் கட்டித் தழுவு கின்றாள்.(3). முன்பொரு காலத்தில் கருடப் பறவையின் மீது ஏறிக்கொண்டு எழுந்தருளி மாவி, சுமாலி முதலிய அரக்கர்கள் எட்டுத் திசைகளில் சிதறியோடவும் பல உயிர் மாண்டொழியவும் கடல் சூழ் இலங்கையை அழித்த பெருமான் (4). பேய்ச்சியின் முலையிலுள்ள நஞ்சினை அவளுயிருடன் ஒக்க உண்டவன்; வத்ஸாசுரனை எறிதடி யாகக் கொண்டு கபித்தாசுரன் மேல் சுழற்றி எறிந்து இரு வரையும் ஒருங்கே முடித்தவன்; குருந்த மரத்தை ஒசித்த கோபாலன்; தடந்தாமரைப் பொய்கைபுக்கு மங்கைய ருடன் தீர்த்தமாடி மகிழ்ந்த பிரான் (5, 6). யமுனையின் ஒரு மடுவிலிருந்து கொண்டு அம்மடு முழுவதையும் தன் நச்சுத் தீயால் கொதிப்பித்துக் கொடுமை புரித்து வந்த காளியன் என்ற நாகத்தின் கொழுப்பை யடக்கி அதன் தலை மேல் நர்த்தனம் ஆடிய பெருமான் (7), சுருண்ட கூந்தலையுடைய இடைச்சியரின் ஆடைகளை அபகரித் தவன்; அவர்தம் சிற்றில் களைச் சிதைத்தவன்; முற்றா இளம் பெண்டிருக்கு விளையாட்டையும் ஆசைப் பெருக் கையும் விளைவித்த பெருமான் (8), ஏழு காளைகளை அடக்கி நப்பின்னைப் பிராட்டியின் மெல்லிய புயங்களை விரும்பி அணைத்தவன்; சுடர் ஆழியையும் ஒண்சங்கையும் தாங்கி நிற்பவன் (9). இவ்வாறெல்லாம் கருத்துப்பட நர நாராயணனைச் சேவித்த ஆழ்வார் திருவைகுந்த விண்ண கரத்தைச் சேவிக்கத் திருவுள்ளம் கொள்ளுகின்றார்.