பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXV

கோயிலும் வேண்டா; அங்குக் கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானும் வேண்டா; அத்திருக்கோயிலைத் தொழு வதையே இயல்பாக உடைய பாகவதோத்தமரின் திருவடி களே சரணம்' (பக்கம் 24) என்று கூறியுள்ளது படிப்பவர், நெஞ்சை நெகிழச் செய்கின்றது.

பாண்டிநாட்டுத் திருத்தலங்களை 28 பக்கங்களிலும், மலைநாட்டு 5 திருப்பதிகளை 7 பக்கங்களிலும் விவரித்து, ஆழ்வாரின் திருத்தலப்பயணத்தை நிறைவு செய்கிறார். இந் நூலினைப் படித்த நமக்கும் நேரில் திருத்தலப் பயணம் சென்ற மன நிறைவு ஏற்படுகிறது.

“அருளிச் செயல்கள்’’ என்ற தலைப்பில் திருமங்கை ஆழ்வார் அருளிச் செய்த ஆறு பிரபந்தங்களின் சாராம் சமும், மடல் பற்றிய விபரங்களும் கூறப்பட்டுள்ளன. தமது முதற் பிரபந்தமான பெரிய திருமொழியில் 86 அர்ச்சாவதார திவ்விய தேசஎம் பெருமான்களை மங்களா சாஸ்னம் செய்து, பத்தாம் பத்துமுதற்கொண்டு அவதார அநுபவத்தில் ஈடுபட்டு இராமாவதாரத்தை இராட்சசர் பாவனையிலும், கிருஷ்ணாவதாரத்தை யசோதை பாவனையிலும், மற்ற அவதாரங்களின் மேன்மையோடு கிருஷ்ணாவதாரத்தின் எளிமையைச் சேர்த்து அநுப வித்து, கடைசியில் பிரளயாபத்தில் பாதுகாத்த எம்பெரு மானையே கிட்டி உய்யும்படி உபதேசித்து, எம்பெருமான் திறத்தில் ஈடுபடாத அவயவங்கள் பயனற்றவை என்று தெரிவித்து, கடைசி திருமொழியில் தேஹ ஸம்பந்தத்தை அறுத்துத் தந்தருள வேணும் என்று எம்பெருமானைப் பிரார்த்தித்து, முதல் பிரபந்தத்தைத் தலைக்கட்டினார். இரண்டாவது பிரபந்தமான திருக்குறுந்தாண்டகத்திலே பசி மிகுதியாகும்வரை சோறிடத் தாமதம் செய்யும் தாயைப்போல, தன்னை அநுபவிப்பதற்குத் தேவையான பெருவிடாய் பிறப்பித்த எம்பெருமான் முகம் காட்டா தொழிய, அவனை விட்டுக் கணமும் தரிக்க வொண்ணாமல்