பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi

எம்பெருமானை வாயினால் பேசியும், தலையாலே வணங்கியும், நெஞ்சாலே நினைந்தும் தரிக்கப் பார்க் கின்றார்.

இவ்வநுபலம் மேலும் விடாயை மிகுதியாகப் பிறப் பிக்க, திருவெழுக்கூற்றிருக்கையிலே ஆராவமுதனை “நின் அடியிணை பணிவன் வருமிடரகல மாற்றோ வினையே’ என்று ஆர்த்தியோடு சரணம் புகுந்தும் அவனைப் பெறாமையாலே, கண்ணாஞ் சுழலையிட்டு இரண்டு தலையை அழித்தாகிலும் அவனை முகங்காட் டச் செய்வோம்” என்று உறுதி பூண்டு, மடலெடுக்கத் தொடங்கி, சிறிய திருமடலில் 'அவதாரங்களில் உண்டான நீர்மையை அழிக்கிறேன்' என்றும், பெரிய திருமடலில், நீர்மைக்கு எல்லை நீலமான கோயில்களில் நின்ற நீர்மையையும் அழிக்கிறேன்' என்றும் 'இனியும் காட்சி கொடுக்காவிடில் மக்கள் அனைவரும் எம்பெரு மானிடம் நம்பிக்கை இழப்பர்' என்று எண்ணிய எம்பெருமான் முகம் காட்ட, தாம் அவனைப் பெற்ற படியை திருநெடுந்தாண்டகத்திலே அநூலந்தித்துத்

தலைக் கட்டுகின்றார்.

அகப் பொருள் தத்துவம், தாய், மகள், பாசுரங்கள் - தூது, ஆகிய இயல் விளக்கங்களில், ஆழ்வார்கள் தாமான தன்மையைவிட்டு பெண் பாவனையை ஏறிட்டுக் கொள்ளுதல் எதற்கு?' என்ற வினாவினை எழுப்பி (பக். 353) ஆழ்வார்கள் பெண் தன்மையைத் தாமாக ஏறிட்டுக் கொள்கின்றனரல்லர். இந்நிலை (அவஸ்தை) தானே பரவசமாக வந்து சேருகிறது' என்று அறிவித்து, இதற்கு அடிப்படையான தத்துவக் கருத்து களை ஆசாரிய ஹிருதயத்தில் கூறப்பட்டுள்ள ப்ரஜ ஞாவஸ்தைகள்' என்பதனை அஷ்டாட்சர விவரணம் கொண்டு விளக்கி, பரபக்தி, பரஞானம், பரமபக்தி முதலான பக்தியின் கொடுமுடிகளை தெரிவித்துள்ளது மிகவும் பாராட்டத் தக்கது.