பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蔓器酶 பரகாலன் பைந்தமிழ்

క్స్డ్

போன்ற நெல் விளைச்சலைக் காணலாம்; பல இடங் களில் முல்லை மலர்கள், கருமுகை மலர்கள், செங்கழு நீர்ப் பூக்கள் மலர்ந்து கிடக்கும் (5): நீலோர்ப்பல மலர் கள் எங்கும் மணம் பரப்பி நிற்கும்; அவற்றில் வண்டுகள் கூட்டங்களாக மதுவினைப் பருகும் (6): கடலை அடுத் திருப்பதால் பரிமளம் மிக்க தழைகள் ஊருக்கு வேலி போல் அமைந்திருக்கும் (7): ஒரு பக்கத்தில் கடலலைகள் முத்துகளை ஒதுக்கித் தள்ளும்; இன்னொரு புறத்தில் அழகிய செந்நெற் பயிர்கள் சாமரம்போல் வளைந்து வீசும் (9). கிட்டத்தட்ட மேற்குறிப்பட்ட சூழ்நிலையை இன்றும் காணலாம்.

ஊரின் சிறப்பு : கண்ணபுரம் என்னும் ஊரின் சிறப்பைப் பற்றியும் பேசுகின்றார் திருமங்கை மன்னன். "பெருகுநீர்க் கண்ணபுரம் (8. 2: 3) என்கின்றார். எப்பொழுதும் இவ்வூரில் விழாக்கள் மலிந்திருக்கும்; ஏராளமான வைணவர்கள் வந்து குழுமுவர். இதனை ஆழ்வார் "மணம் மலி விழவினொடு அடியவர் அளவிய் கணம்' (8. 7: 3) என்று கூறுவர். இந்த வைணவர்கள் சதா கருதியோடு கூடின அருமறைகளை ஒதிய வண்ணம் இருப்பர்(8. 7: 7); நாடோறும் தழல் வளர்த்து வாழும் அந்தணர்களும் (8. 1: 7) சாத்திரங்களைக் கற்ற வைதிகர் களும் வாழும் இடம் இது (8. 1:8).

கண்ணபுரத்து அம்மான் : ஆழ்வார் தானாள தன்மையில் நின்று பேசம்போது, கண்ண்புரம் நாம் தொழுதுமே என்று ஒரு தடவைக்கு ஒன்பது தடவை யாகச் சொல்லி தொண்டீர், உய்யும் வகை கண்டேன்’ என்று தொண்டர்களை ஆற்றுப்படுத்துகின்றார்; தன் மனத்திற்கும் 'வருந்தாது இரு நீ, மடநெஞ்சே, நம்மேல் வினை சாரா என்றும் (8. 6: 6), 'மால் ஆய், மனமே! அருந்துயரால் வருந்தாதிரு” என்றும் (8. 6:8) உபதேசம்