பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரகாலன் பைந்தமிழ்

7

எம்பெருமானின் திருவடியினை வணங்குமாறு ஒரு தடவைக்கு ஒன்பது தடவையாகஉபதேசிக்கின்றார் (6.9). இப்படி உபதேசிக்கும்போது பிராட்டியாரின் புருஷ காரத்தை மறந்தாரிலர்.

மின்னொத்த நுண்மருங்குப்

மெல்லியலைத் திருமார்பில் மன்னத்தான் வைத்துகந்தான் (6) (மின் ஒத்த - மின்னலைப் போன்று, மருங்குல் . இடை மன்ன - பொருந்தும்படி.1

என்று ஆழ்வார் கூறுவதைக் காணலாம். 'எம்பெரு மானின் திருவெட்டெழுத்து மந்திரமே நமக்கு நன்று; தொண்டிர், அடியேன் நமோ நாரணமே என்று அநுசந் தியா தின்றேன். நீங்களும் அதனையே சொல்லுங்கள்' (5. 10; 7) என்கின்றார். ஒரு திருமொழியில் (6. 4) மாதர் மீது மையல் கொள்வதும், அவர்கள் வெறுப்பதும், அவமானப்படுத்திப் பேசுவதுமான செயல்கட்கு இடம் கொடாமல் திருநறையூரைச் சேவிக்குமாறு நெஞ்சிற்குப் பணிக்கின்றார். திருவேங்கடத்தில் எழுந்தருளியிருப்ப வனும், திருக்குடந்தையில் பள்ளி கொண்டிருப்பவனும் ஆகிய எம்பெருமான்களையெல்லாம் நறையூரில் கண்ட தாகப் பேசுகின்றார் (6. 8), மற்றும் ஒரு திருமொழியில் பிறப்பைப் போக்குமாறும், தம்மீது திருவருள் பாலிக்கு மாறும், திருவடிகளைச் சேவிக்க அருளுமாறும் இன்னும் பல படியாகவும் (7. 1) நெஞ்சுருக வேண்டுகின்றார். “நாடேன் உன்னையல்லால் நறையூர் நின்ற நம்பி’ என்றும் நாண்தான் உனக் கொழிந்தேன்’ என்றும், "என் சிந்தை தன்னால் நானே எய்தப் பெற்றேன்" என்றும் (7-2) மிக்க எக்களிப்போடு பேசுகின்றார். இத் திருத்தலத்தைப் பற்றின இறுதிப் பதிகத்தில் (7. 3) 'கனவிற் கண்டேன்; இன்று கண்டமையால் என் கண் இணைகள் களிப்பக் களித்தேனே' என்றும், என்