பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 275

கிருட்டிணாவதாரம், வராகாவதாரம், நரசிம்மாவதாரங் களில் நிகழ்த்திய வீரச் செயல்கள் குறிப்பிடப் பெறு கின்றன. இத்தலத்து எம்பெருமான் பெரிய பிராட்டி யாரைத் திருமார்பில் வைத்துக்கொண்டிருப்பவன்; கன்றி. னால் விளவெறிந்தவன்; இவனே திருச்சேதையில் நித்திய வாசம் செய்பவன். இவன்திருவடியைச் சேவிப் பவர்கள் ஒரு நொடிப் பொழுதும் என் நெஞ்சகத்தை விட்டு நீங்கார்: இதிலுள்ள எப்பொழுதும் என்மனத்தே. இருக்கின்றாரே என்பதற்குப் பெரிய வாச்சான் பிள்ளை, பாகவதர்கள் ஆழ்வார் திருவுள்ளத்தில் திறைந்திருப் பார்களாதலால் சிந்தைக்கினிய பெருமானுக்கு அங்கு இடம் இல்லை என்று நயம்படப் பொருளுரைப்பர்(2).

'சூர்ப்பனகையின் மூக்கும் காதும் வெம்முரண் முலைக்கண்களும் போக்கிய வீரனே?' என்று சொல்லி எம்பெருமானுடைய திறலில் ஈடுபட்டு அவனது திருக் கழல் இணைகளையே துதித்து மலர்களையும் தீர்த்தங் களையும் சமர்ப்பிக்கும் அடியார்கள் நித்தியருரிகளைத் காட்டிலும் சிறந்தவர்களாவர் (3); தேர்வீரனான இராவணனுடைய இலங்கைமா நகரைப் பொடிபடுத்தின. பெருவீரனே! என்று சொல்லித் திருச்சேறை எம்பெரு மானுடைய பலப்பல திருநாமங்களை வாயாரப் பாடும். பெருமையுடையார் எவரோ அவரை ஒருநாளும் பிரியேன்” (4);'பிரகலாதாழ்வானைக் காத்தருளவேண்டி நரசிங்கமூர்த்தியாய்த் தூணில் தோன்றி இரணியனின் மிடுக்கைப் பொடித்த எம்பெரும்ானுக்கே அடிமையா யிருப்பேனேயன்றிச் சமணர் பெளத்தர் முதலானவர்கள் திரளில் சேரக்கடவேனல்லேன்?'(5)

ஆதிவராக மூர்த்தியாய்த் தோன்றி அண்டபித்தியில் சேர்ந்திருந்த பூமியை அதிணின்றும் விடுவித்துக் கொணர்ந்த பண்பாளா என்று இடையறாமல் சொல்லிக்கொண்டு நின் திருவடிக்கே அடிமையானேன்;