பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxii

வேண்டும் என்பது பல்கலைக் கழக மானிய ஆணையத்தின் கொள்கையாக இருந்து வருவது. இதனை நடைமுறைப் படுத்த வேண்டும் என்பது அடியேனின் விழைவு. ஆய்வு இறைவன்-தத்துவம்' ஆக இருப்பதால் இப்பணி iண்ணியமும் புருஷார்த்தமுமாக அமைந்தது. இதற்கு முன்னும் (1977க்கு முன்னும்) இப்பணி செய்து வரினும் (1970 முதல்) ஒய்வு பெற்றதற்குப் பின்னர்தான் (நுகர் இனை ட பிராரப்தம் - நீண்டு வருவதால்) என் பணி மும்முமரமாக நடைபெற்று வருகின்றது. அடியேன் எழுதி வரும் சமய நூல்களை வெளியிட சிறிதளவு மானியமும் அளித்து வருகின்றான் ஏமுமலையப்பன். பதினேழு ஆண்டுகள் (1960-1977) அவன் திருவடி வாரத்தில் திங்கிப் பணியாற்ற வாய்ப்பளித்தவன்; பணிக்காலத்தில் அடியேன் வாழ்வில் பல தடைக் கற்களை நிர்வாகத்தின் மூலம் எழுப்பி அடியேனைக் கசக்கிப் பிழிந்தவன். இந்தத் தொல்லைகளையெல்லாம் தாங்கும் இதயத்தைத் தந்து தாக்குப் பிடிக்கும் ஆற்றலையும் அருளினான்.

என்சொலால் யான்சொன்ன இன்கவி என்பித்துத்

தன் சொலால் தான்தன்னைக்

கீர்த்தித்த மாயன் (திருவாய் 7.9:2)

என்று சடகோபனைத் திருத்தித் திருப்பணிகொண்டது போல, பூர் சடகோபன் பொன்னடி யான அடியேனையும் தன்னைப்பற்றியே எழுதுமாறு திருத்திப் பணி கொண் டுள்ளான். இந்த வாய்ப்பினால் 16. வைணவ நூல்களைப்

4. நினைவுக் குழிழிகள் பகுதி 4 (என் திருப்பதி வாழ்க்கை) என்ற நூலால் இவற்றை அறியலாம்.

5. பண்ணுருட்டி வைணவப்பேரவை (1987)

வழங்கிய விருது.