பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

、蟾念 பரகாலன் பைந்தமிழ்

36. திருவெள்ளறை கரம்பனூர் உத்தமனைச் சேவித்த ஆழ்வார் திருவெள்ளறை' என்ற திவ்விய தேசத் திற்கு எழுந்தருளுகின்றனர். இந்தத் தலத்து எம்பெரு

r':ఉజ్జో ,

'திருமெய்யத்து இன்னமுதவெள்ளம்' என்ற திருநாமமிட்டு (பெரி. திருமடல்) மகிழ்கின்றார்.

தலச் சூழ்நிலை: தென்றல் மாந்தோப்புகளினூடே புகுகின்றது; சோலைகளிலுள்ள மல்லிகை முல்லை மொட் டுகளை மலரச் செய்து நறுமணத்தைப் பரப்புகின்றது (1). குருக்கத்தி மலர்களில் அணைந்து செல்லும் மெல்லிளங் காற்று வீதிகள் தோறும் நறுமணம் பரப்பி வருகின்றது (2). வரால் மீன்கள் துள்ளி விளையாடப் பெற்றவையும் தாமரை மலர்களில் மனம் வீசப்பெற்றவையுமான தடாகங்களாய் சூழப்பெற்றது இவ்வூர் (3). மாஞ் கொவது 86. திவ்வியதேச எம்பெருமான்கள் இவர்தம் பாசுரங்களில் இடம் பெறுகின்றனர். நேராகப் பாசுரம் இட்டருளாதத் திருத்தலங் கட்கு இந்த ஆழ்வார் நேரில்_வந்தாரா என்பது ஐயம். பிற்ஆழ்வார்கட்கும் இஃது ஒக்கும். 11. திருவெள்ளறை: திருச்சி துறையூர் பேருந்து வழி யிலுள்ள ஒரு திருத்தலம். வழி காட்டியுள்ள இட்த்தில் இறங்கி சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்து இவ்வூரை அடையலாம். இத்திருக் கோயில் சுமார் 100 அடி உயரமுள்ள ஒரு சிறு குன் றின் மேல் உள்ளது. கற்கள் வெண்மையானவை. எனவே திருவெள்ளறை" என்ற நாமம், இறை வன்; புருடோத்தமன்; நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம். தாயார்: பங்கயச் செல்வி, செண்பகவல்லி பெரி. திரு. 5-3 (பதிகம்); பெரி திருமடல் 68; சிறி. திருமடல் 33 மேலும் விவரம் வேண்டுவோர் சோ. கா. தி (1) கட்டுரை 4 காண்க.