பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 3{}}

சோலைகளில் போய்ப் புகுந்து அவற்றின் தளிர்களைக் கோதியதனால் வாய்துவர்ப்படைந்த பெண் குயில்கள் பலாப் பழங்களின் மதுவை உண்டு அத்துவர்ப்பை மாற்றுகின்றன (4). பெரிய காட்டு முல்லைகள் கரும்பு களின் மேலேறிப் படர்ந்து வெண்ணிறப் பூக்களை மலர் விக்கின்றன; அம்மலர்களின்மீது வண்டுகள் மொய்க்கும் போது அவற்றின் வாய்களில் தேன் பெருகுகின்றது (5). ஆணும் பெண்ணுமாய்ப் பூவிலே படுத்திருந்த வண்டு களினிடையே ஊடல் உண்டாக, உடனே ஆண்வண்டு பேடைக்குத் தெரியாத ஒரிடத்தில் மறைந்திருக்க எண்ணி மகளிரின் கூந்தலில் மறைந்திருக்கைக்காக மதிமண்டலத் தில் படிந்திருக்கும் சிகரங்களையுடைய மாளிகைகளில் சென்று அணைகின்றன (6). தாமரைப் பூக்களிலுள்ள தேனினைப் பருகின மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக வண்டு கள் இனிய பாக்களைப் பாடுகின்றன (7). மாமரங்களி லும் தாழை மரங்களிலும் மாறாமல் பூத்திருக்கும் மலர் களையுடைய சோலைகளில் சுரும்பு என்னும் ஒருவித சாதி வண்டுகள் தென்னதென்ன என இசைபாடுகின்றன (8), ஒங்கி வளர்ந்த அசோகமரத்தின் சிவந்த பூக்களின் மீது வண்டுகள் சஞ்சரிக்க அதனைக் கண்ட குயில்கள் "அந்தோ! இவ்வண்டுகள் நெருப்பில் அகப்பட்டனவே" என்று கூவுகின்றன (9). இத்தகைய சூழலையுடைய திரு வெள்ளறை மசுலா மணிமாடங்கள் சூழ்ந்தது (10).

எம்பெருமான்: மேற் காட்டிய சூழ்நிலையில் கோயில் கொண்டு எழுந்தளியிருக்கும் எம்பெருமனைப் பற்றி ஆழ்வார் கூறுவது: பெரிய மழு ஏந்தி இருபத் தொரு தலைமுறையில் rத்திரியப் பூண்டுகள் ஒழியு மாறு செய்தவன் பரசுராமன் (1); நான் மறைகளைத் தோற்று வருந்தின நான்முகனுக்குக் கருணை கூர்ந்த அயக்கிரீவவதாரம் செய்து அத்திருமறைகளை மீட்டுக் கொடுத்தவன் (2); ஏழுலகங்களையும் ஒருங்கே நலிந்து