பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருத்தலப் பயணம் 34 £

மடல்-கண்.129). என்று போற்றுவார். திருநெடுந்தாண் டகத்திலும் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத் தானாய்: (10) என்பார். பரத்துவத்திலும் வியூகத் திலும் விபவங்களிலும் அந்தர்யாமித்துவத்திலும் அத் வயிக்கப் பெறாதவர்கள் இங்குப் பின்னானார்’ எனப்படு கின்றனர். அன்னவர்கட்காகத் திருமூழிக்களம் முதலான அர்ச்சாவதார நிலங்களிலே எழுந்தருளியிருப்பவனே!’ என்கின்றார் ஆழ்வார். இத்தலத்து எம்பெருமானைச் சுடர்ப் பொருளாக அருளிச் செய்திருப்பது சிந்திக்கத் தக்கது. எம்பெருமானுடைய கல்யாண குணங்களுள் செளலப்பியம் சிறந்தது; அத்திருக்குணம் இருட்டறை யில் விளக்குப்போலே பிரகாசிப்பது அர்ச்சாவதாரத்திலே: அதைவிட கேவலம் அறிவிலிகளானவர்கட்கே காட்சி தரும் இடமாகிய திருமூழிக்களத்தில் அத்திருக்குணம் ஒளிபெற்று விளங்குதலால் அவ்விடத்தை விளக்கு’ என் றும் சோதி என்றும் செல்லுதல் பொருத்தமாகின்றது.

இத்துடன் ஆழ்வாரின் திருத்தலப்பயணம் நிறைவு பெறுகின்றது. இந்த ஆழ்வார் ஒருவரே அர்ச்சாவதார மூர்த்திகளை அதிகமாக வழிபட்டவர்.

களும் இல்லாத ஊர். இறைவன்: அய்யன், சிரீ சுக்திநாதப் பெருமாள் நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். தாயார்: மதுர வேணி நாச்சியர்ர். பெரி. திரு. 7.1; திரு நெடு. 10 திருநெடு. பெரி. திருமடல் (65) மேலும் விவரம் வேண்டுவோ ம.கோ. தி (கட் டுரை-11) கண்டு தெளியலாம்.