பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧVii

மங்கையாழ்வார் சந்நிதி, (9) திருக்கோவலூர் உலகளந்த பெருமாள் சந்நிதிமற்றும் பல திருக்கோவில்களின் திருப் பணி, திருக்குட முழுக்கு விழா நடத்தி கைங்கரியம் புரிந்து

கைங்கரிய மணி'யாகத் திகழ்கின்றார்.

திருக்கோட்டியூர் பூர் நம்பிகளின் 1000-வது ஆண்டு விழாவையும் மதுரமங்கலம் பூரீ எம்பார் 960-வது ஆண்டு விழாவையும் முன்னின்று நடத்திப் பெரும்புகழ் பெற்ற வர். இங்ங்ணம் வைணவ தத்துவத்தின் சிகரமாக விளங்கிக் கைங்கரியத்தைப் புரிந்து வரும் இப்பெருமகனார் சிறியே னின் நூலுக்கு அணிந்துரை வழங்கியது இந்நூலின் பேறு; அடியேனின் பேறுமாகும் நாடும் நகரமும் நன் கறிய தொண்டக் குலத்தைச் சிறப்பிக்கும் இப்பெருமக னாருக்கு என் இதயம் கலந்த நன்றியைப் புலப்படுத்து கின்றேன்.

வைணவச் செல்வர் ஜஸ்டிஸ் நெலவாய கிருட்டிணசாமி ரெட்டியாரின் அரிய நட்பு கிடைத்தது இறையருள் என்றே சொல்ல வேண்டும். தொண்டை நாடு சான்றோர் உடைத்து' என்று வழங்கப்பெறும் நாட்டைச் சார்ந்தவர். 1973 ஆகஸ்டில் தொண்டை நாட்டுத் திருப்பதிகள்' என்ற என் நூலுக்கு அரியதோர் அணிந்துரை நல்கி ஆசி கூறியவர்.

"மக்கள் நீதிபதி' என்று எல்லோராலும் போற்றப் பெறும் ஜஸ்டிஸ் ரெட்டியார் 1913இல் செங்கற்பட்டு எம். ஜி. ஆர் மாவட்டத்தில் ரெட்டிப்பாளையம் என்ற சிற்றுாரில் பிறந்தவர். செங்கற்பட்டில் உயர் நிலைப் பள்ளிக் கல்வியை முடித்துக் கொண்டு சென்னை கிறித்து வக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்துப் பட்டங்கள் பெற்றவர். செங்கற்பட்டில் 1940இல் வக்கீல் தொழிலைத் தொடங்கியவர். 1949இல் இந்திய அரசு பிறர் பொருளை