பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxviii

மோசம் செய்யும் வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பில் அவற்றை நடத்துவதற்கு சிறப்புநிலை அரசு வழக்குரை ஞராக நியமித்தது. 1950-56 இல் செங்கற்பட்டு மாவட்ட அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். இக்காலத்தில் மூன்று பெரிய வழக்குகளை நடத்தும் சிறப்பு நிலை அரசு வழக்குரைஞராகப் பணியாற்றினார். 1960-64 வரை மாநில அரசு வழக்குரைஞராகவும், 1964-66 வரை அட்வோகேட் ஜெனரலாகவும், 196675வரை சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாகவும் பணி யாற்றி ஓய்வு பெற்றவர்.

ஒய்வு பெற்ற பின்னர் 1977-1980 வரை தேசிய காவலர் ஆணையத்தில் சட்டச் சார்பான உறுப்பின ராகவும், 1978-1981 வரை சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழு (syndicate) உறுப்பினராகவும், வக்கீல்கள்காவலர்கள் சமாதானக் குழு, கோவில் நகைப்பாது காப்புக் குழு, அர்ச்சகர் பயிற்சித் திட்டக்குழு, கோவில் நிர்வாகக் குழு-ஆகியவற்றின் தலைவராகவும் (Chairman) பணியாற்றிப் பெரும் புகழ் பெற்றவர்.

தற்சமயம் பொது நல சம்பந்தமான 12 முக்கிய குழுக் களின் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். தமிழ்நாடு அரசு இலவச சட்ட விசாரணை வாரியத்தின் தலைவராக இருந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இதில் பல சிக்கலான வழக்குகளைத் தீர்த்து வைக்கும் அற்புதங் களை நிகழ்த்தி ஏழை எளியவர்களின் பாராட்டுதல்கட்கு உரியவராகத் திகழ்கின்றார்.

பழுதற ஓதிப் பாங்குடன் நடந்துவரும் இப்பெரியா ரைத் தமிழுலகம் சிறப்பாக வைணவ உலகம் நன்கு அறியும், தீதில் நன்னெறி'யுடன் திகழும் இப் பெரியார் தம்முடை பக்திச் சுவை நிறைந்த பேச்சால் தமிழ்ப் பெரு மக்களின் உள்ளங்களைக் கவர்ந்து அங்கு நிரந்தர இடம்