பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 37}

என்குடங்கால் மருவாளால்: இவளை மடியிலே எடுத்து வைத்துக் கொண்டு உலகியல் பேச்சுகளால் இவ னது நினைவை மாற்றி ஆற்றலாம் என்று கருதினாலும் இவள் என் மடியில் போருந்த மாட்டுகின்றிலள். என் மடியைத் தவிர வேறொன்றையும் அறியாதிருத்த இவளுக்கு இப்போது என் மடி நெருப்புப் போலாயிற்றே. என்ற வருத்தம் இங்கு 'ஆல்' - என்பதில் தோன்றுகிறது.

வாள்நெடுங்கண் துயில் மறந்தாள்: இவள் நமது மடியில் பொருந்தாவிடினும் இவளைப் பஞ்சனையிலே கிடத்தி உறங்கப் பண்ணலாம் என்று நினைத்தாலும், உறக்கம் கொள்வதை அடியோடு மறந்திட்டாள். 'தொல் லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற் நார்க்கும் உண்டோ - கண்கள் துஞ்சுதலே' என்று பாரங்குசநாயகி கூறுவதுபோல் ஆனாள். உறக்கம் என் னும் செயலை இனி இவளுக்குப் புதிதாகத்தான் கற்பிக்க வேண்டும்.

'நான் ஒருவருக்கும் அஞ்சாமலும் ஒரு நொடிப் பொழுதும் கண்ணுறங்காமலும் ஆபாச பந்துக்களிடம் பற்றுவையாமலும் திருவேங்கடமலையையே வாய்வெரு விக் கொண்டிருக்கின்றேன்’ என்று ஆழ்வார் நாயகி தமது நிலையைத் திருத்தாயார் வாக்கில் வெளியிட்டுக் கொள்கின்றார். முன்னிரண்டு அடிகளால் தமக்கு இப் படிப்பட்ட பகவத் விஷ்ய பிராவண்யம் வாய்த்ததற்கு அவனுடைய எழிலார்ந்த சிறப்பே காரணம்; அவனே இதற்கு நிலத்தைப் பண்படுத்துதல் போலத் தன் மனத் தைப் பண்படுத்தினான்’ என்பன பாசுரத்தின் பின்னிரண் டடிகள்.

வண்டார் கொண்டல் உருவாளன்: எம்பெரு மானுடைய திருவுருவத்திற்கு வண்டையும் மேகத்தையும் உவமையாகக் கொள்வது மரபு.

5. திருவிருத்-97,