பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. மகள் பாசுரங்கள்

பெரிய திருமொழியில் மகள் பாவனையில் அமைந்து பதிகங்கள் பதினொன்று', திருநெடுந்தாண்டகத்தில் ஒரு. பதிகம் (21-30) ஆக 12 பதிகங்களாகும். இவற்றுள் தூதுப் பதிகங்களாக நடைபெறும் பாசுரங்களை அடுத்த இயலில் காண்போம். ஏனையவற்றை ஈண்டுக் காண்போம். மகள் பாசுரத்தின் தத்துவம் முன்னர் விளக்கப்பட்டது".

1. திரிபுரம் மூன்று எரித்தானும் (2.8): திருவிட எந்தைபற்றிய திருமொழியில் (2.7) ஆழ்வார் தாமான தன்மையை இழந்து பட்டயாடுகளைத் தாய் வாக்கு களாகக் கண்டோம்; தலைவனைப் பிரிந்த தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தாய் இரங்குவதாக அமைந்த திருமொழி அது. இப்போது எம்பெருமான் இவ்வாழ் வாரை இப்படியா நாம் துடிக்க விட்டோம்! துடிப் பைத்தாமே முறையிட்டுக் கொள்ளும்படியாகவும் நாம் பிற்பட்டோமே!’ ஒன்று முடிமேல் மோதிக்கொண்டு அடி யார் கட்குத் தாம் உதவின குறைகளையும் பரம வில்ட் சணமான (தனித்தன்மையுடைய) வடிவழகையும் ஒளி விட்டுக் கொண்டு திருவட்டயபுயகரம் என்னும் கச்சித்

1. டெரி. திரு. 2.8; 3.6; 8.3; 9.2; 9.3; 9.4; 9.5;

10.10; 11.1: 11.2; 11.3. 2. இம். திரு. 3.6; 1,2,3,4; 9.4; 23; திருநெடுந். 3. இயல்-16.