பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 393

என்பது முதற் பாசுரம். இதனையடுத்த எட்டுப் பாசுரங் களும் இழந்தேன் என் வரிவானையே’ என்று இறுகின் றன. பண்டு இந்திரனால் ஆயர் பெருமக்களுக்கும் ஆநிரைகட்கும் நேர்ந்த கல்மாரித் துன்பத்தைக் கோவர்த் தன மலையைக் குடையாகத் தூக்கி நிறுத்தி நீக்கின ஆபத்பந்துவன்றோ? அஃது என்றைக்கோ நடைபெற் றது என்று நினைக்க வேண்டாதபடி இன்றைக்கும் அப்படிப்பட்ட திருக்குணங்களை விளங்கக் காட்டிக் கொண்டு திருக்கண்ணபுரத்தில் நித்திய சந்நிதி பண்ணி இருக்கின்றானன்றோ? இப்படிப்பட்ட பெருமான் நம்மைக் கைவிடமாட்டான் என்று விச்வளித்து (நம்பி) அவன் பக்கலிலே ஆசைவைத்ததற்குப் பலன் வளை இழக்க லாயிற்றே!' என்று வருந்துகின்றாள் பரகால நாயகி. இத் திருமொழி முழுவதும் தலைவனைப் பிரிந்த தலைவி இரங்கிக் கூறுவதாக அமைந்துள்ளது.

4. பொன் இவர் மேனி (9. 2) , திருநாகை எம் பெருமான் செளந்தரியராஜன்மீது எழுந்தது இத் திரு. மொழி, தலைவனது உருவெளிப்பாட்டில் நலியும் தலைவி தோழியிடம் கூறுவதாக அமைந்தது. திருக் கண்ணங்குடியிலிருந்து திருநாகைக்கு எழுந்தருளின ஆழ்வாரைச் சொல்லுக்கு எட்டாத எம்பெருமானின் வடிவழகு ஈர்க்கின்றது. அவ்வழகில் நெஞ்சைப் பறி கொடுத்த ஆழ்வார் தம் ஆண்மைத் தன்மையை இழந்து பெண்மை நிலை எய்திப் பரகால நாயகியாகின்றார். தன்னை ஈடுபடுத்தின அழகையும் மற்றும் நடைபெற்ற செய்திகளையும் தோழியிடம் கூறித் தரிக்கின்றதாகப் பாசுரங்களிட்டுப் பேசுகின்றார்.

திருக்கோயிலினுட் புகுந்து செளந்தரியராஜனைச் சேவிக்கின்றாள் பரகால நாயகி. என்றைக்கும் எங்கும் கண்டறியாத திருக்கோலம் கொண்டிருந்தான் எம்பெரு மான். அப் பெருமானை இன்னானென்று அறிய