பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/453

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 463

ஈடுபட்டுக் கண்ணுறக்கம் கொள்ளாமல் துடிக்கும் படியா யிற்று தோழிமார் தாயார் முதலியோரை நோக்கி 'மங்கைமீர், நான் இங்ங்ணம் துடித்திருப்பது தகுதியோ? திருமால்தான் இரங்கியருளாதொழியினும் நீங்களாகிலும் இரங்கலாகாதோ? இங்கு எனக்கு இந்நிலையில் பிரதி கூலமாக இருக்கும் பொருள்கள் யாவும் அநுகூலமாக இருக்கும் இடத்தில் என்னைக் கொண்டு சேர்க்க லாகாதோ? தனியாக இருக்கும் என்னைத் துன்புறுத்தும் பொருள்கள் யாவும் அவனும் நானும் சேர்ந்திருக்கும் இடத்தில் அநுகூலமாகுமன்றோ? அங்ங்னம் ஆகும்படித் திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங் கள்' என்று வேண்டுகின்றாள்.

திண்திமில் ஏற்றின் மணியும், ஆயன்

தீங்குழல் ஓசையும் தென்ற லோடு கொண்டதோர் மாலையும், அந்தி ஈன்ற

கோலஇளம்பிறை யோடு கூடி பண்டைய அல்ல இவைந மக்கு;

பாவியேன் ஆவியை வாட்டம் செய்யும்; கொண்டல் மணிநிற வண்ணர் மன்னும்

குறுங்கு டிக்கே என்னை உய்த்திடுமின் (5).

(திமில்-முசுப்பு: ஆயன்-இடையன் கோலம்-அழ கிய, ஆவி-உயிர் ; கொண்டல்-மேகம்; மன்னுபொருந்தி வாழப்பெற்ற1.

என்பது ஐந்தாம் பாசுரம். இத்திருமொழியின் பாசுரங்கள் யாவும், குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின்’ என்றே முடிகின்றன. உய்த்திடுமின்' என்ற முன்னிலை ஏவல் பன்மை வினைமுற்றுக்கு ஏற்ப பாசுரந்தோறும் அன்னை மீர்' என்றோ தோழி மீர்' என்றே விளி வருவித்துக் கொண்டு பாசுரத்திற்குப் பொருள் காணல் வேண்டும்.