பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

釜G4 பரகாலன் பைந்தமிழ்

காளையின் மணியோசை, தென்றல் காற்று, மாலைப் பொழுது, இளம்பிறை ஆகிய இவை பிரிவாற்றாமையால் வருந்தும் காதலர்களை மேலும் வருந்தச் செய்யும். எரி கின்ற நெருப்பில் எண்ணெய் வார்த்தாற் போன்ற நிலை யாக வடிவெடுக்கும். 'இவை பலகாலும் நம்மை வருத்தி யிருந்தாலும் இப்போது வருத்துவனபோல் இதற்கு முன்பு ஒருநாளும் செய்யவில்லை; இவை ஒவ்வொன்றும் தனியாக நின்று கொலை செய்யப் போதுமானவை; கூட் டமாக வந்து இன்று நலிவதை அந்தோ! பொறுக்க முடிய இல்லை. சாதாரணப் பொருள்களை ஆசைப் படாமல் உயர்வற உயர்நலமுடையவனாய், அயர்வறும் அமரர் கள் அதிபதியானவனை' ஆசைப்படும் படியான பாவத் தைப் பண்ணினேன். என்னுடைய ஆவி இனித் தரிக்க விரகில்லை; நான் வேண்டும் என நீங்கள் நினைத்தால், திருக்குறுங்குடியில் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுங்கள்; அங்கே எழுந்தருளியிருக்கின்ற கொண்டல் மணிவண்ணரைக் கண்டவுடன் என் வாட்ட மெல்லாம் திரும்; மேகத்தையும் மணியையும் கண்ட பின்னரும் விட்டம் நிற்குமோ? ஆகவே, பாதகப் பொருள்களின் வசத்திலே அகப்பட்டு நான் நலிவு படாமல் இவையெல் லாங் அநுகூலங்களாகப் பெறும் தேசத்தில் என்னைக் கொண்டு போய் விட்டிடுங்கள்' என்கின்றாள். கொண்ட தோர் மாலை- இன்று இவளை முடித்தே விடுவது' என் னும் கோட்பாடுடைய மாலைப் பொழுது. இவ்விடத்தில் ஆண்டாள் தன்னைக் கண்ணன் இருக்கும் இடங்களில் உய்த்திடுமாறு நுவலும் நாச். திரு. 12 அநுசந்திக்கத் தக்கது.

8. திருத்தாய் செம்போத்தே (10. 10): இது பரகால நாயகியின் பாசுரமாக நடைபெறுகின்றது. செம்போத்து, காக்கை, கிளி, குயில் முதலிய பறவைகள் தங்கள் வழக்கத் தின்படி ஒலி செய்து கொண்டிருக்கையில், அவற்றை