பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/459

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 盛纹袋

அன்னை முனிவதும் : 'பெற்றோர் உறவினர் முத லானோர் இருக்கும்போது அவர்களைக் கொண்டு தனக்குற்ற நன்மைகைைத் தேடிக் கொள்ள வேண்டியதே முறை. ஆனால் இச்சிறு பெண்பிள்ளை எல்லோரையும் கலக்காமல் தான்றோன்றியாகத் தானே (பகவத் விஷயத் தில்) ஒரு நாயகனைக் காதலிக்கப் புறப்பட்டாள்; இப் படியும் ஓர் அநியாயம் உண்டோ?' என்பது தாய் பொடிந்து சொல்வது.

11. மன் இலங்கு பாரத்தது (11.3) : முன்னைய திருமொழியிலேயே "நம்பெண்மை சிந்தித்திராது போய்த் தூமலர் நீர் கொடு தோழி! நாம் தொழுதேத்தினால், கார்முகில் வண்ணரைக் காணலாங் கொலோ? (11. 2: 9) என்று தன் இயல்புக்கு மாறாக அதிகமாக முயன்றாகி லும் எம்பெருமானைக் காணப்பெறுவோம் என்று ஆழ்வார் கோலினதால், இதனைப் பொறுக்க மாட்டாத எம்பெருமான் வந்து முகங்காட்டி ஆழ்வீர், சிறிது காலம் தாமதித்த மாத்திரத்தினால் நீர் இத்தனைச் சாகசத் தில் இழியலாமோ? ஒரு சேதநனைப் பெறுவதற்கு நான் எவ்வளவு பாடுபடுகின்றேன் என்பதை நீர் அறிய மாட்டிரோ? உம்மைப் பிரிந்ததனால் நானன்றோ கிலேசப்படுகின்றவன்? என்னை விட்டு நொடிப் பொழு தும் தரிக்க மாட்டாதவர்கள் யாவரோ, அவர்களை விட்டு யானும் தரிப்பவனல்லனே என்னுடைய நிலைமை களை நீர் அறிந்தும் நீர் இவ்வாறு கிலேசப்படுதல் தகுமோ?’ என்றாற்போலச் சில வார்த்தைகள் சொல்லித் தன் சொல்லாமையடங்கலும் காட்ட, ஆழ்வார் அவற்றையெல்லாம் அநுசந்தித்து விடாய்த்தவன் சிறிது நீர் பருகினால் அது விடாயைத் தணிக்காமல் மேன் மேலும் அதனை உணரச் செய்யுமாப்போலே அவ்வது சந்தானமானது மேலும் விடாயைப் பிறப்பிக்க, அதனால் மிகவும் நோவுபட்டு, பின்னரும் அவனைக்