பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 பரகாலன் பைந்தமிழ்

கிட்டி நித்தியா நுபவம் பண்ணப்பெற்றிலோமேயாகி லும் இவ்விடாயும் பதற்றமும் எல்லாம் இவ்விஷயத்தில் ஆகப்பெற்றோமே! என்று உண்டான மனநிறைவுடன் பேசித் த்லைக்கட்டுவதாக அமைத்ததி இத் திருமொழி. இதுவும் நாயகி பாசுரத்தால் நடைபெறுகின்றது.

கண்ணன் மனத்துள்ளே

நிற்கவும், கைவளைகள் என்னோ கழன்ற?

இவைஎன்ன மாயங்கள்? பெண்ஆனோம் பெண்மையோம்

நிற்க, அவன் மேய அண்ணல் மலையும்

அரங்கமும் பாடோாம? (7)

(மாயங்கள் - ஆச்சரியம்; மேய - இருக்கும்:

அண்ணல் - சிறந்ததான)

என்பது இப்பதிகத்தின் ஏழாம் பாசுரம். நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் (4, 7: 5) என்ற திருவாய் மொழியில் எம்பெருமான் தம்முடைய எல்லா உறுப்பு களிலும் புகுந்து நின்றாலும், அதில் மனநிறைவு பெறா மல் கண்ணாற் காணப்பெற வேண்டுமென்று ஆசைப் பட்டு வருந்தின நம்மாழ்வாரைப் போன்று இப்பரகால நாயகியும் தனது நெஞ்சினுள்ளே எம்பெருமான் உறைந் திருப்பதைக் கண்டும் மன நிறைவு பெறாமல் வளை இழக்கின்றாள் என்பதை இப்பாசுரத்தில் காணலாம்.

'எம்பெருமான் தொலைவிடத்தனாயிருந்தால் காதல் பெறாமல் மேனி மெலிந்து வருந்துதல் தத்தியே: அவன் ஏன் மனத்தினுள்ளேயிருந்து அருகிலிருப்பவனைப்போல் இருந்தும் இங்ங்ணம் என் மேனி மெலிவதற்குக் காரணம் என்னவோ? இது வியப்பான நிகழ்ச்சியாயுள்ளதே என்