பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 415.

இம்சைகளைச் செய்வதற்கு ஆதாரமும் வேண்டும் என்றா யிற்று.

புனல் அரங்கம் ஊர் என்று போயினார்: "நான் உயிர் பெற்றிருப்பதாகத் திருவரங்கம் பெரிய கோயில் நம்மூர்' என்று சொல்லிக்கொண்டே போயினார்’ என்கின்றாள்.

இங்கே வியாக்கியான சூக்தி: 'திரு நகரியில் நின்றும் கோயிலளவும் செல்லப் பொழிலாய்க் கிடந்ததோ என் னில்: ஒரு காள மேகம் விர்வித்துக்கொண்டு போகா நின் றால் கண்டவிடமெங்கும் தளிரும் முறியும் ஆகாதோ? என்று பட்டர் அருள்செய்வர்” என்பது.

இங்ங்னமாக மகள் பாசுரங்கள் நடைபெறுவதை அது பவித்து மகிழ்கிறோம். கண்ணனோடு ஊடி உரைத்தல் (10.8) என்ற திருமொழி மகள் பாசுரம் போல காணப் படினும் அது பரகாலநாயகியின் பாசுரம் அன்று.