பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

晏2器 பரகாலன் பைந்தமிழ்

வினாக்களை விடுக்க. அவற்றுக்கு மறுமாற்றம் உரைக் கும் வகையில் மைவண்ண நறுங் குஞ்சி (21) தொடங்கி ஐந்து பாசுரங்கள் சென்றன. தோழி வாளா இருக்க தலைவிக்கு ஆற்றாமை மீதுார்ந்தது. கண்ணிற் கண்ட ஒரு வண்டைத் தூது விடுகின்றாள் பரகால நாயகி இப் பாசுரத்தில். இராமாவதாரத்தில் திர்யக்குகள் (பிராணிகள்) தூது சென்று காரியம் தலை வைக்கக் காண்கையாலே வண்டுவிடு தூதிலே முயல்கின்றாள் இங்கு. மேற்பாசுரங்களில் உரைத்தவற்றையெல்லாம் ஈண்டும் உரைத்துக் கொள்க.

சிறு வண்டே ஏற்கெனவே நீ சிறியையாயிருப் பதும் ஒரு நற்பேறு; அநுமன் இலங்கைக்குத் தூது சென்ற போது சில இடங்களில் தன் வடிவைச் சிறு வடிவாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருந்தது; நீ அங்ங்ணம் செய்யத் தேவையில்லை; உன் உருவமே சிறியையாயிராய் நின்றாய் காண்’ என்ற சிறப்புப் பொருள் தோன்றக் காணலாம். அநுமனாகில் இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?’ என்று ஆராயவேண்டியிருக்கம்; நீ வண்டாகையாலே தோளினை மேலும் நன்மார்பின் மேலும் சுடர் முடிமேலும் தாளிணை மேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில் (திருவாய். 1, 14 7) விருப்ப மான ஓரிடத்தில் இருந்து கொண்டு வார்த்தை சொல்ல லாம் படியான பிறப்பன்றோ உன் பிறப்பு' என்பதுவும் கருத்தாகும் (விவட்சிதம்).

'சிறுவண்டே!' என்று உரக்கக் கூவினதும் வண்டு துணுக்கென எட்டிப் பார்க்கின்றது. தொழுதேன் உனை’ என்கின்றாள் பரகால நாயகி. தலைமகனுடைய திருவடிகள் எனக்கு ஏதுக்கு? உன்னைத் துதிப்பதும் உன் காலில் விழுவதுமன்றோ எனக்குப் பணி?’ என்பது குறிப்பு. எம்பெருமானைக் காட்டிலும் புருஷகார