பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் - தூது பற்றியவை 429

லிருந்து வந்தவர்கள் என்று தோற்றும்படி செருக்கி வார்த்தை சொல்ல வேண்டும்.

அவர்க்கு அறிவிக்க வேண்டிய வார்த்தை என்ன? என்று வண்டு கேட்க. 'ஓர் மாது கின் நயந்தாள்’ என்று சொல்லுக; ஒருத்தி என்று சொல்லும் போதே அவரே தெரிந்து கொள்வர். ஒரு காட்டிலே ஒரு மான் அம்பு பட்டுக் கிடந்து துடிக்கின்றது' என்றால் உடனே அம்பு எய்தவனுக்குத் தெரியுமல்லவா?

நின் நயந்தாள்: ஒர் மாது' என்றாலே போதுமானது. அதற்கு மேலும் ஒருவார்த்தை சொல்ல வேண்டும் என்று நீ கருதினாயாகில் நின் நயந்தாள்' (உன்னை ஆசைப் பட்டிருக்கின்றாள்) என்று சொல்லுக. ஒரு தாழ்ந்த புரு ஷனை ஆசைப்பட்டாளல்லள்; பரம புருஷனான நின்னை ஆசைப்பட்டாள் என்று சொல்லுக, பரத்து வத்திலே ஆசைப்பட்டிலள்,வியூகந்திலே ஆசைப்பட்டிலள், விபவவதாரங்களிலே ஆசைப்பட்டிலள், அந்தர்யா மித்து வத்திலே ஆசைப்பட்டிலள், ஆசைப்படுவதற்குரிய அர்ச் சாவதாரத்திலே ஆசைப்பட்டாள் என்று சொல்லுக.

இறையே இயம்பிக் காண்: முற்ற முடிய வார்த்தை சொல்ல வேண்டியதில்லை; சிறிது வாயைத் திறக்கும் போதே உன்னை அவர் எங்ங்ணம் கொண்டாடப் போகின் றார், பார்; அநுமன் பெற்ற பரிசும் குறைவு என்னும் படியன்றோ நீ வெகுமானம் பெறப் போகின்றாய். நான் சொல்லவேண்டா; நீயே! அநுபவத்தில் அறிவாய்' என் கின்றாள்.

காரை விடுதூது:

நீர் வானம் மண் எரி கால்

ஆய் நின்ற நெடுமால்தன்

தராய நறுந்துளவம் -

பெருந்தகையேற்கு அருளானே!